Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயணிப்போருக்கு புதிய அம்சம்... ரயில்வே நிர்வாகம் திட்டமிடல்

எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயணிப்போருக்கு புதிய அம்சம்... ரயில்வே நிர்வாகம் திட்டமிடல்

By: vaithegi Mon, 11 July 2022 1:54:55 PM

எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயணிப்போருக்கு  புதிய அம்சம்...   ரயில்வே நிர்வாகம் திட்டமிடல்

இந்தியா: ரயில்வே துறையில் அவ்வப்போது ரயில்வே நிர்வாகம் சில முக்கிய மாற்றங்களை செய்து வருகிறது.சாதாரணமாக நீண்ட தூரம் பயணிக்கும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் 12 முதல் 13 தூங்கும் வசதி கொண்ட பெட்டிகள் இருக்கும். அதாவது மொத்தமாக 864 முதல் 936 படுக்கைகள் இருக்கும். பின்னர், இந்த ரயில் பெட்டிகளின் தரம் உயர்த்தப்பட்ட போது தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளின் எண்ணிக்கையை ரயில்வே வாரியம் குறைத்தது.

அதன்படி, சென்னையில் இருந்து மதுரை செல்லும் பாண்டியன் எக்ஸ்பிரஸ், சென்னையில் இருந்து திருச்சிக்கு செல்லும் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ், சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு செல்லும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் மற்றும் சோழன் எக்ஸ்பிரஸ் போன்ற ரயில்களில் தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளின் எண்ணிக்கை 13 ல் இருந்து 10 ஆக குறைக்கப்பட்டது. 936 படுக்கையில் இருந்து 780 படுக்கையாக குறைக்கப்பட்டது.

railway administration,express ,ரயில்வே நிர்வாகம்,எக்ஸ்பிரஸ்

அதனால் பெரும்பாலான பயணிகள் போதுமான சீட் கிடைக்காமல் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். தற்போது மேலும், குறிப்பிட்ட சில ரயில்களில் தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளை 2 ஆக குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ரயில்களில் ஏசி பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம் என ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

பொதுவாகவே ரயில்களில் ஏ.சி. முதல் அடுக்கு, 2 அடுக்கு மற்றும் 3 அடுக்கு பெட்டிகள் உள்ளன. சில ரயில்களில் ஏ.சி. 3 அடுக்கு பெட்டிகளின் எண்ணிக்கையை உயர்த்தவுள்ளதாக ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. மேலும், ஏ.சி. 3 அடுக்கு பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பான ஆய்வு நடைபெற்று வருவதாகவும், கூடிய விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

Tags :