Advertisement

வாட்ஸ்அப் வெளியிட்ட புதிய அம்சம்

By: vaithegi Thu, 07 Sept 2023 2:13:45 PM

வாட்ஸ்அப் வெளியிட்ட புதிய அம்சம்

இந்தியா : இனி வீடியோவையும் எச்டியில் அனுப்பலாம் ..வாட்ஸ்அப் ஆனது தரமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து கொள்ளும் அம்சத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இதையடுத்து மெட்டாவின் தலைமை நிர்வாக அதிகாரியான மார்க் ஜூக்கர்பெர்க், வாட்ஸ்அப் செயலில் எச்டி புகைப்படங்களை அனுப்பமுடியும் எனவும், விரைவில் எச்டி வீடியோவையும் பகிர்ந்து கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.

இதையடுத்து அதன்படி, புகைப்படங்களை எச்டியில் அனுப்பும் அம்சம் அறிமுகமானது. இதே போல வீடியோவிலும் அறிமுகமாகும் என கூறப்பட்ட நிலையில், அதுவும் அறிமுகமாகி உள்ளது. இனி புகைப்படங்களை மட்டுமல்லாமல் வீடியோவையும் எச்டியில் அனுப்பலாம். எனவே இதற்கு முதலில் நீங்கல் அனுப்ப நினைக்கும் புகைப்படம் அல்லது வீடியோ எச்டியில் இருக்க வேண்டும்.

whatsapp,video ,வாட்ஸ்அப் ,வீடியோ


மேலும் அவ்வாறு இருக்கும் பட்சத்தில், அந்த போட்டோ அல்லது வீடியோவை செலக்ட் செய்ய வேண்டும். பிறகு மேல் புறத்தில் இருக்கும் வசதிகளில் எச்டி என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதை கிளிக் செய்தவுடன் உங்களுக்கு 2 தேர்வுகள் வரும். அதில் எந்த அளவு தெளிவுடன் அந்த வீடியோ அல்லது புகைப்படத்தை அனுப்ப வேண்டும் என்று செலக்ட் செய்து விட்டு, ஒகே என்பதை கிளிக் செய்ய வேண்டும். இப்பொழுது நீங்கள் அனுப்பும் வீடியோ அல்லது புகைப்படம் அல்லது எச்டியில் இருக்கும்.

இத்தனியா அடுத்து சமீபத்தில் பல புதிய அப்டேட்களை வெளியிட்டது. அதில் வீடியோ மெசேஜ், சைலன்ஸ் அன்நோன் நம்பர்ஸ், குரூப் வீடியோ கால், மெசேஜ் எடிட், வாய்ஸ் சேட், ஸ்கிரீன் ஷேரிங் போன்ற அம்சங்கள் அடங்கும். இதன் இடையில் வேறு சில அம்சங்களையும் சோதித்து வருகிறது. அந்தவகையில், 1 மொபைல் போனில் பல வாட்ஸ்அப் கணக்குகளை பயன்படுத்தும் அம்சத்தை விரைவில் வெளியிடக்கூடும் என தெரிவிக்கப்பட்டது.

Tags :