Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வடமேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது

வடமேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது

By: vaithegi Thu, 20 July 2023 10:20:26 AM

வடமேற்கு  வங்கக்கடலில்  புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது

இந்தியா: உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ..... மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,

இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதனை அடுத்து நாளை முதல் 24ஆம் தேதி வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

low pressure area,northwest bay of bengal , காற்றழுத்த தாழ்வு பகுதி,வடமேற்கு  வங்கக்கடல்

இந்த நிலையில் வடமேற்கு வங்க கடல் பகுதியில் ஒடிசா கடற்கரையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அதைத்தொடர்ந்து அடுத்த இரண்டு நாட்களில் ஒடிசாவை நோக்கி நகரக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம்தகவல் தெரிவித்து உள்ளது.

Tags :