Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வங்கக்கடலில் வரும் 15-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு

வங்கக்கடலில் வரும் 15-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு

By: vaithegi Sat, 11 Nov 2023 10:49:44 AM

வங்கக்கடலில் வரும் 15-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு

சென்னை : சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் கூறியதாவது:தென்கிழக்கு மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வரும் 15-ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.

இதையடுத்து தமிழகத்தில் வருகிற 14-ம் தேதி முதல் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தற்போது கிழக்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுவதால் தமிழகம், புதுச்சேரியில் இன்று சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

low pressure area,bay of bengal ,காற்றழுத்த தாழ்வு பகுதி ,வங்கக்கடல்

அதைத்தொடர்ந்து வருகிற 12, 13-ம் தேதிகளில் ஓரிரு இடங்களிலும், 14, 15, 16-ம் தேதிகளில் சில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :