Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி வருகிற 8-ம் தேதி உருவாகி, 9-ம் தேதிக்கு மேல் புயலாக வலுப்பெறும்

புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி வருகிற 8-ம் தேதி உருவாகி, 9-ம் தேதிக்கு மேல் புயலாக வலுப்பெறும்

By: vaithegi Sun, 07 May 2023 3:33:55 PM

புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி வருகிற 8-ம் தேதி உருவாகி, 9-ம் தேதிக்கு மேல் புயலாக வலுப்பெறும்

சென்னை : சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுயிருப்பதாவது:- தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் இன்று (மே 6) வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாகி உள்ளது.

எனவே இதன் தாக்கத்தால் வரும் 7-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒரு நாள் தாமதமாக வருகிற 8-ம் தேதி உருவாகக்கூடும். வருகிற 9-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, வடக்கு திசையில் நகர்ந்து, மத்திய வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுபெறக்கூடும்.

new low pressure area,storm ,புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, புயல்


வட தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. எனவே இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்றும், நாளையும் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 9, 10-ம் தேதிகளில் ஓரிரு இடங்களில், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மேலும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 10-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 7 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயரக்கூடும்.தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகும் புயல் காரணமாக, தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய அந்தமான் கடல்பகுதிகளில் வருகிற 10-ம் தேதி வரை அதிகபட்சமாக மணிக்கு 70 கி.மீ.வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags :