Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் 24 மணி நேரமும் குடிநீர் விநியோகம் செய்யும் வகையிலான புதிய திட்டம்

தமிழகத்தில் 24 மணி நேரமும் குடிநீர் விநியோகம் செய்யும் வகையிலான புதிய திட்டம்

By: vaithegi Fri, 31 Mar 2023 1:43:46 PM

தமிழகத்தில் 24 மணி நேரமும் குடிநீர் விநியோகம் செய்யும் வகையிலான புதிய திட்டம்

சென்னை:ரூ.420 கோடி மதிப்பில் புதிய திட்டம் ..... 2023 – 2024-ம் நிதியாண்டிற்கான தமிழகத்தின் பட்ஜெட் தாக்கல் கடந்த மார்ச் 20-ம் தேதி அன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதன் பிறகு தற்போது அரசு துறைகளின் தனிப்பட்ட பட்ஜெட் மீதான விவாதங்கள் நடந்து கொண்டு வருகின்றது. முன்னதாக நகராட்சி, நிர்வாகத்துறை மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு துறை சார்பாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

இதையடுத்து அதன் பிறகு, துறை சார்ந்த புதிய திட்டங்கள் மற்றும் அதற்கான அரசின் நிதி ஒதுக்கீடுகளை குறித்து அறிவித்தார். எனவே அதன்படி, தமிழகத்தில் உள்ள சுற்றுலா தலங்களை மேம்படுத்தும் விதமாக, வருடந்தோறும் முக்கிய இடங்களில் விழாக்கள் நடத்திடவும், அங்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்திடவும் ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

project,drinking water supply ,திட்டம்,குடிநீர் விநியோகம்


மேலும், ரூ.174 கோடி மதிப்பில் புதிதாக பேருந்து நிலையங்கள் அறந்தாங்கி, புதுக்கோட்டை, திருவாரூர், உளுந்தூர்ப்பேட்டை, பத்மனாபுரம், நாகப்பட்டினம், மாங்காடு, ஸ்ரீவில்லிப்புத்தூர் மற்றும் கொமாரபாளையம் ஆகிய 9 நகராட்சிகளிலும், திருச்சி, நாகர்கோவில் மற்றும் திண்டுக்கல் ஆகிய 3 மாநகராட்சிகளிலும் அமைக்கப்படும்.

அதிலும் குறிப்பாக, ரூ.22.50 கோடி செலவில் திருப்பூர், தூத்துக்குடி, திருச்சி, சேலம், மதுரை மற்றும் கோவை ஆகிய 6 மாநகராட்சிகளில் இடிபாடு கழிவுகள் மற்றும் கட்டுமானங்களை செயலாக்கும் ஆலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தொடர்ந்து, ரூ.420 கோடி மதிப்பில் ரூ.5000 முதல் ரூ.10,000 வரையிலான புதிய இணைப்புகளின் மூலம் தமிழகத்தின் அனைத்து நகராட்சி மற்றும் 9 மாநகர்ச்சிகளிலும் 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் திட்டம் தொடங்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

Tags :