Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சீனாவின் ஷான்டாங் மற்றும் ஹெனான் மாகாணங்களில் புதிய வகை வைரஸ் பரவி வருகிறது

சீனாவின் ஷான்டாங் மற்றும் ஹெனான் மாகாணங்களில் புதிய வகை வைரஸ் பரவி வருகிறது

By: vaithegi Wed, 10 Aug 2022 07:39:43 AM

சீனாவின் ஷான்டாங் மற்றும் ஹெனான் மாகாணங்களில் புதிய வகை வைரஸ் பரவி வருகிறது

சீனா: சீனாவின் ஷான்டாங் மற்றும் ஹெனான் மாகாணங்களில் புதிய வகை வைரஸ் பரவி வருவதாகவும், இதை ஒத்து இதுவரை மட்டும் இந்த புதிய வகை வைரஸ்க்கு 35 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் அந்நாட்டின் குளோபல் டைம்ஸ் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து கிழக்கு சீனாவில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் தொண்டை சவ்வு பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் சோதனை செய்யப்பட்டதில் இந்த வைரஸ் கண்டறியப்பட்டது.

new type of virus,china ,புதிய வகை வைரஸ், சீனா

மேலும் புதிதாகக் கண்டு பிடிக்கப்பட்ட லாங்யா ஹெனிப வைரஸ், விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு வந்திருக்கலாம் என சீன மருத்து ஆராய்ச்சி விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல், சோர்வு, இருமல், பசியின்மை, குமட்டல் போன்ற அறிகுறிகள் இருப்பதாகவும் அவர்கள் சுட்டிக் காட்டினர். எனினும் இந்த வைரஸ் ஏற்படுத்தும் பாதிப்புகள் மிகவும் தீவிரமானது அல்ல எனவும் இதனால் பொதுமக்கள் பயப்பட தேவையில்லை எனவும் விஞ்ஞானி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Tags :