Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வாட்ஸ்அப்பில் புதிய அப்டேட் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது

வாட்ஸ்அப்பில் புதிய அப்டேட் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது

By: vaithegi Thu, 17 Aug 2023 3:33:42 PM

வாட்ஸ்அப்பில் புதிய அப்டேட் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது

வாட்ஸ்அப் சேனல்களில் பகிரும் செய்திகளை பயனர்களுக்கு நேரடியாகவே Forward செய்யும்படியான அப்டேட் வெளியீடு ....whatsapp நிறுவனம் அடுத்தடுத்து பயனர்களின் அனுபவத்தை மேலும் சிறப்பாக்கும் வகையிலான அப்டேட்களை வெளியிட்டபடி இருக்கிறது.

அந்த வகையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு தான் Whatsapp செயலியில் Channal என்னும் புது அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, Whatsapp சேனலில் முக்கிய கருத்துக்கள், செய்திகள், புகைப்படம் அல்லது வீடியோக்களை பகிரும் படியாக வடிவமைக்கப்பட்டிருந்தது.

whatsapp,update ,வாட்ஸ்அப்,அப்டேட்


இதையடுத்து இந்த சேனல் அப்டேட் பயனர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்த நிலையில் தற்போது சேனலில் மேலும் ஒரு புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. அதாவது, whatsapp சேனல் மூலமாக பகிரும் செய்திகள், வீடியோக்கள், புகைப்படம் மற்றும் கருத்துக்களை உங்களது whatsapp நண்பர்களுக்கு நேரடியாகவே ஷேர் செய்யும்படியான அப்டேட் வழங்கப்பட்டு உள்ளது.

இதனை அடுத்து இந்த புதிய அப்டேட் ஆண்ட்ராய்டு மற்றும் IOS பயனர்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டு உள்ளதாகவும் whatsapp நிறுவனம் தெரிவித்து உள்ளது.

Tags :