Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • Whatsapp Web ல் எளிதாக மொபைல் எண் மூலமாகவே லாகின் செய்துகொள்ளும்படியான புதிய அப்டேட் வெளியீடு

Whatsapp Web ல் எளிதாக மொபைல் எண் மூலமாகவே லாகின் செய்துகொள்ளும்படியான புதிய அப்டேட் வெளியீடு

By: vaithegi Wed, 12 July 2023 2:52:02 PM

Whatsapp Web ல் எளிதாக மொபைல் எண் மூலமாகவே லாகின் செய்துகொள்ளும்படியான புதிய அப்டேட்  வெளியீடு

இந்தியா: Whatsapp நிறுவனம் தொடர்ந்து தனது பயனர்களின் வசதிக்காக அடுத்தடுத்து பல அப்டேட்டுகளை வெளியிட்டபடியே இருந்து கொண்டு வருகிறது. அந்த வகையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு தான் ஒரு Whatsapp அக்கவுண்ட்டை 4 டிவைஸ்களில் லாகின் செய்து கொள்ளும்படியான அப்டேட்டை Whatsapp நிறுவனம் வெளியிட்டுயிருந்தது.

இந்த நிலையில், தற்போது மேலும் ஒரு புதுவித அப்டேட்டை Whatsapp வெளியிட்டு இருக்கிறது. அதாவது, Whatsapp Web மூலமாக விண்டோஸில் லாகின் செய்யும்போது க்யூ ஆர் கோட் ஸ்கேன் செய்து whatsapp லாகின் செய்ய முடியும்.

update whatsapp ,அப்டேட்  ,Whatsapp


ஆனால், தற்போது மொபைல் எண் மூலமாகவே வாட்ஸ்அப் வெப் மூலமாக லாகின் செய்து கொள்ளும்படியான புதுவித அப்டேட்டை Whatsapp வெளியிட்டு இருக்கிறது. அதாவது, whatsapp லாகின் செய்வதற்கு அதற்கான Whatsapp மொபைல் நம்பரை பதிவு செய்தவுடன் அந்த எண்ணிற்கு எட்டு இலக்க OTP அனுப்பப்படுகிறது. அந்த OTP எண்ணை பதிவு செய்ததுடன் Whatsapp லாகின் செய்து கொள்ள முடியும்.

இதனால், பயனாளர்கள் மற்றொரு வாட்ஸ்அப் பயனாளர்களின் வாட்ஸ்அப் கணக்கை எளிதில் லாகின் செய்து கொள்ள முடியும். மேலும், இப்புதிய அப்டேட் தற்போது மெட்டா டெஸ்டர்களுக்கு மட்டுமே வழங்கி உள்ளதாகவும், விரைவில் IOS மற்றும் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

Tags :