Advertisement

வாட்ஸ்அப் வந்து இருக்கும் புதிய அப்டேட்

By: vaithegi Sat, 21 Oct 2023 2:46:56 PM

வாட்ஸ்அப் வந்து இருக்கும் புதிய அப்டேட்

இந்தியா : பயனர்களின் வாட்ஸ்அப் Statusக்கு அவதார் வடிவிலான எமோஜிகளில் ரிப்ளை செய்யும்படியான புதிய அப்டேட் வெளியீடு ...வாட்ஸ்அப் நிறுவனம் பயனர்களின் அனுபவத்தை மேலும் சிறப்பாகும் வகையில் பல அப்டேட்களை வெளியிட்டபடி இருந்து கொண்டு வருகிறது.

அந்த வகையில், ஒரே வாட்ஸ்அப் செயலியில் ஒன்றிற்கு மேற்பட்ட அக்கௌன்ட்களை லாகின் செய்யும்படியான வசதியும் வழங்கப்பட்டு உள்ளது.

update,whatsapp ,அப்டேட்,வாட்ஸ்அப்

இதற்கு இடையே, வாய்ஸ் மெசேஜ்களையும் view once வசதி மூலமாக ஒரு முறை மட்டுமே கேட்கும்படியான அப்டேட்டும் கூடிய விரைவில் வழங்கப்பட இருக்கிறது. மேலும் இது போக, புகைப்படம் மற்றும் வீடியோக்களை HD முறையில் தெளிவாக பயனர்களுடன் பகிரும் வசதி என பல அப்டேட்கள் வழங்கப்பட்டு உள்ள நிலையில் தற்போது புது அப்டேட் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதாவது, பயனர் ஒருவர் ஸ்டேட்டஸ் மூலமாக புகைப்படம் அல்லது வீடியோக்களை பகிரும் போது அதற்கு அவதார் வடிவிலான எமோஜிகளில் பதிலளிக்கும் படியான அப்டேட் வழங்கப்பட்டு உள்ளது. மேலும், இந்த அப்டேட் IOS பயனர் மற்றும் Android பயனர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

Tags :
|