Advertisement

வாட்ஸ்அப்பில் வெளியாகி இருக்கும் புதிய அப்டேட்

By: vaithegi Thu, 06 July 2023 1:29:21 PM

வாட்ஸ்அப்பில் வெளியாகி இருக்கும் புதிய அப்டேட்

இந்தியா : வாட்ஸ்அப் பயனாளிகள் Text Size ஐ தங்களது விருப்பத்திற்கு தகுந்தாற்போல மாற்றிக்கொள்ளும்படியான புதிய அப்டேட்டை வாட்ஸ்அப் வெளியீடு ... வாட்ஸ்அப் நிறுவனம் பயனாளர்களின் வசதிக்காக தொடர்ந்து பல அப்டேட்டுகளை வெளியிட்டபடியே இருந்து வருகிறது.

இந்த வகையில், வீடியோ கால் முறையில் ஸ்கிரீன் ஷேர் செய்வது, whatsapp செயலியிலிருந்து எளிமையாக வீடியோ எடுப்பது, HD முறையில் வீடியோக்களை பயனர்களுக்கு அனுப்பும் வசதி, எமோஜிகளை போலவே பெரிய பெரிய ஸ்டிக்கர்களை அனுப்பும் வசதி என பல பல அப்டேட்டுகளை தொடர்ந்து whatsapp வெளியிட்டு கொண்டு வருகிறது.

update,whatsapp ,அப்டேட்,வாட்ஸ்அப்

அந்த வகையில், தற்போது Windows மூலமாக whatsapp பயன்படுத்தும் பயனாளர்களுக்கு முகப்பு பக்கத்தில் டெக்ஸ்ட் சைஸை மாற்றம் செய்து கொள்ளும்படியான அருமையான ஒரு அப்டேட்டை ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. அதாவது, எழுத்துக்களின் வடிவம் பெரிதாக இருக்க வேண்டும் என்றால் CTRL + அழுத்த வேண்டும் மற்றும் எழுத்துக்களின் வடிவத்தை குறைக்க CTRL – அழுத்தி தேவையான அளவு எழுத்துக்களின் வடிவத்தை பொருத்தி கொள்ளலாம்.

மேலும், எழுத்துக்களின் வடிவத்தை திருப்பவும் பழைய நிலைமைக்கு திரும்ப மாற்றுவதற்கு CTRL+0 அழுத்தி தேவையான விருப்பத்தை தேர்வு செய்து கொள்ளும்படியான அருமையான அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த அப்டேட் தற்போது மெட்டா டெஸ்டர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகவும், கூடிய விரைவில் அனைத்து பயனர்களுக்கும் இந்த புதிய அப்டேட் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

Tags :
|