Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வாட்ஸ் அப்பில் Caption ஐ எடிட் செய்து கொள்ளும் படியான புதிய அப்டேட் வெளியீடு

வாட்ஸ் அப்பில் Caption ஐ எடிட் செய்து கொள்ளும் படியான புதிய அப்டேட் வெளியீடு

By: vaithegi Tue, 08 Aug 2023 5:02:56 PM

வாட்ஸ் அப்பில் Caption ஐ எடிட் செய்து கொள்ளும் படியான புதிய அப்டேட் வெளியீடு

இந்தியா: வாட்ஸ் அப்பில் பயனர்களுக்கு புகைப்படம், வீடியோக்கள் அனுப்பும் போது அதன் Caption ஐ எடிட் செய்து கொள்ளும் படியான புதிய அப்டேட் வெளியீடு ..வாட்ஸ் அப் நிறுவனம் பயனர்களின் அனுபவத்தை மேலும் சிறப்பாக்கும் வகையில் தொடர்ந்து பல்வேறு அப்டேட்டுகளை வழங்கி கொண்டு வருகிறது.

அந்த வகையில், பயனர்களுக்கு HD வீடியோக்களை பகிர்வது, வீடியோ கால் மூலமாக ஸ்கிரீன் ஷேர் செய்வது, ஒரு மொபைலிலிருந்து மற்றொரு மொபைலுக்கு சாட் ஹிஸ்டரி அனுப்பும் வசதி, புது வகையான எமோஜிக்கள், அனிமேஷன் அவதார் எனத் தொடர்ந்து புதிய அப்டேட்டுகளை வெளியிட்டபடியே இருந்து கொண்டு வருகிறது.

update,whatsapp ,அப்டேட் ,வாட்ஸ் அப்

மேலும், ஏற்கனவே பயனர்களுக்கு அனுப்பிய செய்தியை ஒரு சில நிமிடங்களில் எடிட் செய்து கொள்ளும் வசதியையும் வாட்ஸ் அப் வழங்கி இருந்தது தற்போது அதனையும் தாண்டி புகைப்படம் அல்லது வீடியோக்களை பயனர்களுக்கு அனுப்பும் போது கேப்ஷன் தவறாக அனுப்பிவிட்டால் அதனையும் எடிட் செய்து கொள்ளும் படியான வசதியை வாட்ஸ்அப் வெளியிட்டுயிருக்கிறது.

இதனை அடுத்து இப்புதிய அப்டேட் IOS பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு உள்ளதாகவும் ஒரு சில வாரங்களில் அனைத்து பயனர்களும் இந்த அப்டேட்டை பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.


Tags :
|