Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வாட்ஸ்அப் மூலமாக வரும் புதிய அழைப்புகளை பாதுகாக்கும்படியான புதிய அப்டேட் வெளியீடு

வாட்ஸ்அப் மூலமாக வரும் புதிய அழைப்புகளை பாதுகாக்கும்படியான புதிய அப்டேட் வெளியீடு

By: vaithegi Mon, 16 Oct 2023 3:46:02 PM

வாட்ஸ்அப் மூலமாக வரும் புதிய அழைப்புகளை பாதுகாக்கும்படியான புதிய அப்டேட் வெளியீடு


இந்தியா: வாட்ஸ்அப் நிறுவனம் பயனர்களின் அனுபவத்தை மேலும் சிறப்பாகும் வகையில் தொடர்ந்து பல அப்டேட்களை வெளியிட்டபடி இருந்து கொண்டு வருகிறது.

அந்த வகையில், 4 டிவைஸ்களில் ஒரே நேரத்தில் வாட்ஸ்அப் அக்கௌன்ட்டை லாகின் செய்யும்படியான வசதி, தெரியாத நபர்களிடமிருந்து வரும் அழைப்புகளை mute செய்யும் வசதி, ஈமெயில் மூலமாக அக்கௌன்ட் லாகின் செய்யும் வசதி, குறிப்பிட்ட நபர்களிடம் பேசிய சேட்டில் இருக்கும் குறிப்பிட்ட 1 செய்தியை மட்டும் பின் செய்து கொள்ளும் வசதி என ஏகப்பட்ட வசதிகள் வழங்கப்பட்டு உள்ளது.

update,whatsapp ,அப்டேட் ,வாட்ஸ்அப்


இதையடுத்து தற்போது வாட்ஸ்அப் கால் தொடர்பாக பயனர்களுக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்கும் விதமாக புதிய அப்டேட் வழங்கப்பட்டு உள்ளது. அதாவது, வாட்ஸ்அப் மூலமாக தவறான நோக்கத்தில் தீங்கிழைக்கும் நபரின் இருப்பிடத்தை வாட்ஸ்அப் மூலமாகவே அறிந்துகொள்ளும்படியாகவும், அவர்களிடமிருந்து கால் எதுவும் வராத வகையில் மாற்றிக்கொள்ளும்படியான அப்டேட் வழங்கப்பட்டு உள்ளது.

தற்போதைக்கு இந்த புதிய அப்டேட் பீட்டா டெஸ்ட்டர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகவும், அடுத்தடுத்த வாரங்களில் அனைத்து பயனர்களும் பயன்பெறலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Tags :
|