Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஓய்வூதியதார்களுக்கென்று பிரத்யேக செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட ......புதிய இணையதளம் விரைவில் அறிமுகம்

ஓய்வூதியதார்களுக்கென்று பிரத்யேக செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட ......புதிய இணையதளம் விரைவில் அறிமுகம்

By: vaithegi Thu, 16 June 2022 6:47:28 PM

ஓய்வூதியதார்களுக்கென்று பிரத்யேக செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட ......புதிய இணையதளம் விரைவில் அறிமுகம்

இந்தியா: இந்தியாவில் அரசு துறைகளில் பணியாற்றி பணிக்காலம் முடிவடைந்த பிறகு அவர்களுக்கு சம்பளத்தின் ஒரு பகுதி ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது வங்கிகளில் ஓய்வூதியம் பெறுவதில் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இதனால் முதிர்வு காலத்தில் ஓய்வூதியதார்கள் ஓய்வூதியம் பெறுவதில் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. தற்போது இதற்கு தீர்வு காணும் வகையில் மத்திய அரசு பிரத்யேக செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட புதிய இணையதளம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் இது தொடர்பாக பென்சன் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த அறிவிப்பின்படி , இந்தியாவில் அரசு ஓய்வூதியதாரர்களின் நலனுக்காக செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட புதிய இணையதளம் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

internet,artificial intelligence,pensioners ,இணையதளம் ,செயற்கை நுண்ணறிவு ,ஓய்வூதியதார்கள்

இதற்கு "பாவிஷ்யா" என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கை நுண்ணறிவு கொண்ட இணையதளத்தில் ஓய்வூதியதாரர்களுக்கு தானாகவே அலர்ட் கொடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த இணையதளம் ஓய்வூதியதாரர்கள் மற்றும் ஓய்வூதியதாரர் சங்கங்களுடன் தொடர்பில் இருக்கும் எனவும் கூறியுளளார்.

மேலும் அவர்களிடமிருந்து தகுந்த கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை பெற்று கொள்ளும். அத்துடன் பென்சன் செயலாக்கம் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பென்சன் வழங்கப்படுவது டிஜிட்டல் மயமாக்குவதற்கு பாவிஷ்யா இணையதளம் பயன்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்
அவ்வப்போது வங்கிகளில் ஓய்வூதியம் பெறுவதில் சில பிரச்சனைகள் ஏற்படுகிறது. இந்த புதிய இணையதளம் மூலமாக சரி செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார். அதனால் இந்த நுண்ணறிவு திறன் கொண்ட புதிய இணையதளம் ஓய்வூதியதார்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பாக்கப்படுகிறது.

Tags :