Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அமெரிக்காவில் பைசர் தடுப்பூசியைப் போட்டுக்கொண்ட நர்ஸ் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி

அமெரிக்காவில் பைசர் தடுப்பூசியைப் போட்டுக்கொண்ட நர்ஸ் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி

By: Karunakaran Thu, 31 Dec 2020 12:17:03 PM

அமெரிக்காவில் பைசர் தடுப்பூசியைப் போட்டுக்கொண்ட நர்ஸ் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வரும் அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி மக்களின் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. கொரோனா வைரசை ஒழிப்பதில் 95 சதவீதம் செயல்திறன் கொண்ட பைசர் நிறுவத்தின் தடுப்பூசி முதற்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கும், வயதில் மூத்தவர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பைசர் தடுப்பூசியைப் போட்டுக்கொண்ட நர்ஸ் ஒருவருக்கு தடுப்பூசி போட்ட ஒரு வாரத்துக்கு பின்னர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த மேத்யூ என்ற 45 வயதான நர்ஸ் கடந்த 18-ந்தேதி தான் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதாக பேஸ்புக்கில் பதிவிட்டார்.

nurse,pfizer,united states,corona infection ,செவிலியர், ஃபைசர், அமெரிக்கா, கொரோனா தொற்று

தடுப்பூசி போட்டதால் கையில் ஒரு நாளைக்கு புண் இருந்ததை தவிர வேறு எந்தவிதமான பக்க விளைவுகளும் ஏற்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார். இந்நிலையில் தடுப்பூசி போட்ட 6 நாட்களுக்கு பிறகு மேத்யூவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

இதையடுத்து அவர் கொரோனா பரிசோதனை செய்தார். இதில் அவருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. தடுப்பூசி போட்ட ஒரே வாரத்தில் நர்சுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட சம்பவம் அமெரிக்க மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
|
|