Advertisement

மூதாட்டியின் மூளையில் உயிருடன் இருந்த ஒட்டுண்ணி புழு

By: Nagaraj Tue, 29 Aug 2023 6:46:17 PM

மூதாட்டியின் மூளையில் உயிருடன் இருந்த ஒட்டுண்ணி புழு

ஆஸ்திரேலியா: மூளையில் உயிருடன் இருந்த புழு... உலகிலேயே முதன் முதலில் ஆஸ்திரேலிய பெண் ஒருவரின் மூளையில் இருந்து 8 சென்டி மீட்டர் நீளமான உயிருள்ள புழு கண்டுபிடித்து அகற்றப்பட்டது. 64 வயதான ஆஸ்திரேலிய பெண் ஒருவர் இரண்டு ஆண்டுகளாக நிமோனியா, வயிற்று வலி போன்ற பல உடல் உபாதைகளால் அவதியுற்று வந்ததாக கூறப்படுகிறது.

parasitic worm,female brain,alive,removed,australia ,ஒட்டுண்ணி புழு, பெண் மூளை, உயிருடன், அகற்றினர், ஆஸ்திரேலியா

அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் அப்பெண்ணின் மூளைக்குள் ஓபிடாஸ்காரிஸ் ராபர்ட்ஸி என்று அறியப்படும் 8 சென்டிமீட்டர் நீளமான உயிருள்ள ஒட்டுண்ணி புழுவை கண்டுபிடித்தனர். அந்த பெண் தனது குடியிருப்புக்கு அருகில் இருந்து கீரைகளை சேகரித்து எடுத்த போது ஒட்டுண்ணியின் முட்டை உடலுக்குள் நுழைந்திருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

Tags :
|