- வீடு›
- செய்திகள்›
- புதுக்கோட்டையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
புதுக்கோட்டையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
By: vaithegi Tue, 11 Apr 2023 2:44:14 PM
புதுக்கோட்டை: நாட்டில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பரவல் அதிகரித்து கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக மகாராஷ்டிரா, டெல்லி, கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பவரல் அதிகரித்துள்ளது.
இதேபோன்று தமிழகத்திலும் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், புதுக்கோட்டையில் கொரோனாவுக்கு ஒருவர் பலியாகினார்.
புதுக்கோட்டையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அரசு மருத்துவக் கல்லூரி கொரோனா பல்நோக்கு சிறப்பு சிகிச்சை மையத்தில் கொரோனாவிற்காக சிகிச்சை பெற்று வந்த 70 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
ஏற்கனவே புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கொரோனா தொற்றும் ஏற்பட்டதால் முதியவர் உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை மட்டும் 427 பேர் கொரோனாவிற்காக உயிர் இறந்துள்ளனர். தற்போது மாவட்டத்தில் 8 பேர் கொரோனா சிகிச்சை பெற்று கொண்டு வருகின்றனர்.