Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பிரேசிலில் சீன தடுப்பூசி பரிசோதனையில் உட்படுத்தப்பட்டவர் உயிரிழந்துள்ளதாக தகவல்

பிரேசிலில் சீன தடுப்பூசி பரிசோதனையில் உட்படுத்தப்பட்டவர் உயிரிழந்துள்ளதாக தகவல்

By: Karunakaran Thu, 12 Nov 2020 07:53:24 AM

பிரேசிலில் சீன தடுப்பூசி பரிசோதனையில் உட்படுத்தப்பட்டவர் உயிரிழந்துள்ளதாக தகவல்

உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் பிரேசில் 3-வது இடத்தில் பிரேசில் உள்ளது. அந்நாட்டில் 57 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல், கொரோனா உயிரிழப்புகள் பட்டியலில் உலக அளவில் இரண்டாவது அதிக உயிரிழப்பையும் பிரேசில் சந்தித்துள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு அங்கு 1 லட்சத்து 63 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், சீன மருந்து நிறுவனமான சைனோவேக், ‘கொரோனாவேக்’ என்ற தடுப்பூசியை உருவாக்கி உள்ளது. இந்த தடுப்பூசி பிரேசில் நாட்டில் 7 மாகாணங்களில் பொதுமக்களுக்கு செலுத்தி பரிசோதிக்கப்பட்டு வந்தது. இந்த தடுப்பூசியின் 60 லட்சம் ‘டோஸ்’களை இறக்குமதி செய்வதற்கு பிரேசில் நாட்டின் சுகாதார கட்டுப்பாட்டு நிறுவனம் ‘அன்விசா’ அனுமதியளித்தது.

corona vaccine,chinese vaccine,brazil,death ,கொரோனா தடுப்பூசி, சீன தடுப்பூசி, பிரேசில், மரணம்

இந்நிலையில் ‘கொரோனாவேக்’ தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி சோதிக்கும் பரிசோதனையின்போது மிக மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களில் ஒரு நபர் உயிரிழந்துவிட்டதாக உள்ளூர் ஊடகங்கள் நேற்று செய்திவெளியிட்டன. இதன் காரணமாக சீன தடுப்பூசியின் பரிசோதனையை பிரேசில் நாட்டின் சுகாதார கட்டுப்பாட்டு அமைப்பு ‘அன்விசா’ அதிரடியாக நிறுத்தி வைத்துள்ளது.

தற்போது நிறுத்திவைக்கப்பட்டிருந்த சீன நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி பரிசோதனைக்கு பிரேசில் சுகாதார கட்டுப்பாட்டு அமைப்பு ‘அன்விசா’ மீண்டும் அனுமதி வழங்கியுள்ளது. பரிசோதனையில் பங்கேற்ற நபர் உயிரிழந்ததற்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டதற்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும் உயிரிழப்பு தற்கொலை காரணமாகவே நிகழ்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், சீன தடுப்பூசி பரிசோதனையை மீண்டும் தொடங்க போதுமான தகவல்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|