Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சனாதன எதிர்ப்பு மாநாடு குறித்து சிபிஐ விசாரணை கோரிய மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

சனாதன எதிர்ப்பு மாநாடு குறித்து சிபிஐ விசாரணை கோரிய மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

By: vaithegi Fri, 22 Sept 2023 09:55:46 AM

சனாதன எதிர்ப்பு மாநாடு குறித்து சிபிஐ விசாரணை கோரிய மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

சென்னை: சனாதன ஒழிப்பு மாநாடு வழக்கு இன்று விசாரணை .... சென்னையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக தான் தமிழக முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் என்ற அமைப்பின் சார்பாக சனாதன ஒழிப்பு மாநாடு நடத்தப்பட்டது. அரசின் உரிய அனுமதியோடு மாநாடு நடத்தப்பட்ட நிலையில் இந்நிகழ்ச்சியில் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதனம் எதிர்க்கப்பட வேண்டிய விஷயம் இல்லை. ஒழிக்கப்பட வேண்டியது என கூறினார். ஆனால் இதற்கு பாஜகவினர் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் பிரதமர் மோடி , மத்திய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரும் எதிர்வினை ஆற்றினர்.

anti-sanatana conference,inquiry,cbi ,சனாதன எதிர்ப்பு மாநாடு,விசாரணை,சிபிஐ

இந்த நிலையில் சனாதன எதிர்ப்பு மாநாடு பற்றி சிபிஐ விசாரணை கோரிய மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. சனாதனத்திற்கு எதிராக நடந்த மாநாட்டில் அமைச்சர்கள் உதயநிதி, சேகர் பாபு பாபு கலந்து கொண்டது அரசியல் அமைப்புக்கு எதிரானது என மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது .

சென்னையை சேர்ந்த ஜெகன்நாத் என்பவர் உச்சநீதிமன்றத்தில் ரீட் மனு தாக்கல் செய்துள்ளார். மேலும் அத்துடன் சாதன ஒழிப்பு மாநாட்டின் பின்புலம் பற்றி விசாரணை நடத்த சிபிஐக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Tags :