Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மான் கன்று ஒன்றை வெள்ளத்தில் இருந்து மீட்கும் சிறுவனின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல்

மான் கன்று ஒன்றை வெள்ளத்தில் இருந்து மீட்கும் சிறுவனின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல்

By: Karunakaran Wed, 22 July 2020 4:46:00 PM

மான் கன்று ஒன்றை வெள்ளத்தில் இருந்து மீட்கும் சிறுவனின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல்

சமூக வலைதளங்களில் சிறுவன் ஒருவன் ஆற்று வெள்ளத்தில் இருந்து மான்று கன்றை மீட்டு வருவது போன்ற புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. சிறுவனின் புகைப்படம் மற்றும் பாகுபலி திரைப்படத்தின் பிரபல காட்சியின் புகைப்படங்கள் இந்த பதிவில் இணைக்கப்பட்டு அவை வைரலாகி வருகின்றன.

அந்த பதிவில், இந்த புகைப்படம் அசாம் வெள்ளத்தின் போது எடுக்கப்பட்டதாகவும், புகைப்படத்தில் இருக்கும் சிறுவன் அசாம் மாநிலத்தின் உண்மையான பாகுபலி என கூறப்பட்டுள்ளது.பாகுபலி இந்தியா முழுக்க அதிக பிரபலமான திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

assam,rescue,deer calf,flood ,அசாம், மீட்பு, மான் கன்று, வெள்ளம்

தற்போது இந்த வைரல் பதிவு குறித்து ஆய்வு செய்ததில், அந்த புகைப்படம் எட்டு ஆண்டுகளுக்கு முன் வங்கதேசத்தில் எடுக்கப்பட்டது என கண்டறியப்பட்டுள்ளது. ஜூன் 23, 2012-ஆம் ஆண்டு வங்கதேசத்தின் நோக்யாளி பகுதியில் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த புகைப்படத்தில் இருக்கும் சிறுவன் அசாம் மாநிலத்தை சேர்ந்தவன் இல்லை என்பதும், இந்த புகைப்படம் அசாம் வெள்ளத்தின் போது எடுக்கப்படவில்லை என்பதும் தெரிய வந்துள்ளது. தற்போது அசாம் மாநிலத்தை சேர்ந்த பாகுபலி என வைரலாகும் செய்தி போலி செய்தி என தெரிய வந்துள்ளது.

Tags :
|
|