Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா வைரஸ் காலக்கட்டத்தினை 1962 ஆண்டிலேயே வால்டர் மொலினோ கணித்ததாக புகைப்படம் ஒன்று வைரல்

கொரோனா வைரஸ் காலக்கட்டத்தினை 1962 ஆண்டிலேயே வால்டர் மொலினோ கணித்ததாக புகைப்படம் ஒன்று வைரல்

By: Karunakaran Mon, 24 Aug 2020 11:31:11 AM

கொரோனா வைரஸ் காலக்கட்டத்தினை 1962 ஆண்டிலேயே வால்டர் மொலினோ கணித்ததாக புகைப்படம் ஒன்று வைரல்

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பரில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. 8 மாத காலத்தில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவி விட்டது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கைநாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.

இந்நிலையில் இத்தாலி நாட்டை சேர்ந்த காமிக்ஸ் வரைபட கலைஞரான வால்டர் மொலினோ 1962 ஆண்டு வாக்கில் வரைந்த தனிப்பட்ட போக்குவரத்து வாகனங்களை மக்கள் பயன்படுத்துவது போன்ற சித்திரம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 58 ஆண்டுகளுக்கு முன் வரையப்பட்ட சித்திரம் தற்போதைய கொரோனாவைரஸ் பாதிப்பு காலக்கட்டத்தில் பயன்படுத்த வேண்டிய ஒன்றாக நெட்டிசன்கள் பார்க்கின்றனர்

walter molino,corona virus,corona prevalence,corona prevention ,வால்டர் மோலினோ, கொரோனா வைரஸ், கொரோனா பாதிப்பு, கொரோனா தடுப்பு

இந்த பழைய சித்திரத்தை பலர் தங்களின் பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பகிர்ந்து வருகின்றனர்.மக்கள் ஒருவர் பயன்படுத்தக்கூடிய வகையில் கண்ணாடியால் மூடப்பட்டு வாகனங்களில் பயணிப்பது போன்ற காட்சிகள் இந்த புகைப்படத்தில் உள்ளது. 2020 கொரோனாவைரஸ் பாதிப்பு காலக்கட்டத்திற்காக பரிந்துரைக்கப்பட வேண்டிய தனிநபர் போக்குவரத்து வாகனங்கள். வால்டர் மொலினோ எனும் கலைஞர் 1962 டிசம்பரில் வரைந்திருக்கிறார் எனும் தலைப்பில் இது வைரலாகி வருகிறது.

இதுகுறித்து ஆய்வு செய்தபோது, இந்த சித்திரம் 1962 ஆண்டில் வெளிவந்த லா டாமினிகா டெல் கொரியர் எனும் இத்தாலி நாட்டு நாளிதழில் அச்சிடப்பட்டு இருப்பதும், பெரும் நகரங்களில் ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசலை குறைக்க வழி செய்ய எதிர்கால கற்பனையில் வரையப்பட்டது என்பதும் தெரிய வந்துள்ளது. போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில் வரையப்பட்ட சித்திரத்தை நெட்டிசன்கள் கொரோனாவைரஸ் பாதிப்பு காலக்கட்டத்தில் பயன்படுத்த பரிந்துரைக்கப்படுவதாக கூறி வருவது தெரிய வந்துள்ளது.

Tags :