Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • குரோஷியாவில் இதய வடிவில் உள்ள தீவின் ஒரு பகுதி விற்பனைக்கு இருக்காம்

குரோஷியாவில் இதய வடிவில் உள்ள தீவின் ஒரு பகுதி விற்பனைக்கு இருக்காம்

By: Nagaraj Tue, 14 Feb 2023 04:56:41 AM

குரோஷியாவில் இதய வடிவில் உள்ள தீவின் ஒரு பகுதி விற்பனைக்கு இருக்காம்

குரோஷியா: குரோஷியாவில் இதயம் போல காணப்படும் தீவின் ஒரு பகுதி விற்பனை செய்யப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதய வடிவில் காணப்படும் அட்ரியாடிக் தீவு சுற்றுலாப் பயணிகளால் காதல் தீவு என அழைக்கப்படுகிறது. தீவு மற்றும் அதனை சுற்றி ஆண்டுக்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமாக புகைப்படங்கள் எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.

heart island,sale,notice,part, ,இதயத்தீவு, விற்பனை, அறிவிப்பு, ஒரு பகுதி

தீவில் ஹோட்டல்கள், வில்லாக்கள் இல்லை என்றாலும், சுற்றுலாப் பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். ஒரு லட்சத்து 42 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட தீவில், 40 ஆயிரம் சதுர மீட்டர் வரை 13 மில்லியன் யூரோக்களுக்கு விற்பனை செய்ய இருப்பதாக அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

இது பல்வேறு தரப்பினரையும் ஈர்த்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இதை விலைக்கு கேட்டு யாராவது தொடரபு கொண்டார்களா என்பது குறித்து எவ்வித அறிவிப்பும் வெளியாகவில்லை.

Tags :
|
|
|