Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே வீட்டுக்குள் புகுந்த விஷபாம்பு

முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே வீட்டுக்குள் புகுந்த விஷபாம்பு

By: Nagaraj Mon, 07 Aug 2023 8:23:33 PM

முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே வீட்டுக்குள் புகுந்த விஷபாம்பு

மும்பை: வீட்டிற்குள் புகுந்த விஷபாம்பு… மகாராஷ்டிரா முன்னாள் முதல்வரும், சிவசேனா (உத்தவ்) தலைவருமான உத்தவ் தாக்கரே வீடு மும்பை பாந்த்ராவில் இருக்கிறது.

மாதோஸ்ரீ என்று பெயரிடப்பட்டிருக்கும் பங்களாவுக்கு, பால் தாக்கரே உயிரோடு இருந்தபோது அரசியல் தலைவர்கள் அனைவரும் அங்கு வந்து சந்தித்துப் பேசிவிட்டுச் செல்வது வழக்கம். பால் தாக்கரே யாரையும் தனது வீட்டுக்கு வரவழைத்துப் பேசுவதுதான் வழக்கம். சமீபத்தில் மகாராஷ்டிராவில் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க கூட்டணி அரசு, உத்தவ் தாக்கரே வீட்டுக்குக் கொடுக்கப்பட்டு வந்த பாதுகாப்பை குறைத்துக் கொண்டது.

இந்த நிலையில் உத்தவ் தாக்கரேவின் வீட்டுக்குள் விஷப்பாம்பு ஒன்று நுழைந்துவிட்டது. இதனை பங்களாவில் வேலை செய்த ஊழியர்கள் பார்த்துவிட்டனர். உடனே ஊழியர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. பங்களா வளாகத்துக்குள் நுழைந்த பாம்பைப் பிடிக்க ஊழியர்கள் முயற்சி மேற்கொண்டனர். சத்தம் கேட்டு உத்தவ் தாக்கரேவும் வந்தார்.

uddav thackeray,house,venomous snake,caught,forest ,உத்தவ் தாக்கரே, வீடு, விஷபாம்பு, பிடிப்பட்டது, வனப்பகுதி

இதுகுறித்து உடனே பாம்பு பிடிப்பவர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பாம்பு பிடிப்பவர்கள் வந்து தண்ணீர் தொட்டிக்குப் பின்புறம் மறைந்திருந்த பாம்பை, பத்திரமாக பிடித்தனர். பாம்பு பிடிக்கப்படுவதை உத்தவ் தாக்கரேவும், அவரின் மகன் தேஜஸ் தாக்கரேவும் பார்த்துக் கொண்டிருந்தனர். பிடிபட்ட பாம்பு, வனப்பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டு விடப்பட்டது.

பிடிபட்ட பாம்பு விஷத்தன்மை கொண்டது என்றும், நான்கு அடி நீளம் கொண்டதும் என்றும் பாம்பு பிடிப்பவர்கள் தெரிவித்தனர். இந்தச் சம்பவத்தால் தாக்கரே இல்லத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags :
|
|