Advertisement

தேர்வு மையம் மாறி வந்த மாணவிக்கு உதவிய போலீஸ் அதிகாரி

By: Nagaraj Mon, 20 Mar 2023 8:34:01 PM

தேர்வு மையம் மாறி வந்த மாணவிக்கு உதவிய போலீஸ் அதிகாரி

அகமதாபாத்: தேர்வு மையம் மாறி வந்த மாணவியை போலீஸ் சைரனுடன் அழைத்து சென்ற போலீஸ் அதிகாரிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

குஜராத்தில் தற்போது பள்ளி பொதுத்தேர்வுகள் நடந்து வருகின்றன. வழக்கம் போல் ஒரு மாணவியை அவரது தந்தை தேர்வு மையத்திற்கு அழைத்துச் சென்றார். பிறகு தந்தை திரும்பிப் போய்விட்டார். அங்கு சென்ற பிறகுதான் அவர் வேறு தேர்வு மையத்துக்கு வந்திருப்பது தெரிய வந்தது. தேர்வு நேரம் நெருங்கிவிட்டதால் மாணவி பதற்றமடைந்தார்.

அப்போது, தேர்வு மையத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர், மாணவி பதற்றத்துடன் இருப்பதைப் பார்த்து விசாரித்தார். மாணவி நிலைமையை விளக்கினார். அப்போது போலீஸ் அதிகாரி அவரது ஹால் டிக்கெட்டை வாங்கி சோதனை செய்தார்.

exam,center,police,siren, ,சைரன் ஒலி,  குஜராத், போலீஸ், அதிகாரி

இதில் 20 கி.மீ. தொலைவில் உள்ள தேர்வு மையத்தின் பெயர் உள்ளது. உடனே போலீஸ் வாகனத்தில் மாணவியை ஏற்றிக்கொண்டு தேர்வு மையத்துக்கு விரைந்தார். போலீஸ் வாகனத்தில் ‘சைரன்’ அடித்துவிட்டு, சரியான தேர்வு மையத்துக்கு போலீஸ் அதிகாரி விரைந்தார். அவருக்கு மனமார்ந்த நன்றி கூறிவிட்டு, தேர்வு மையத்திற்குள் நுழைந்தார் மாணவி.

இந்த சம்பவங்களை எல்லாம் நேரில் பார்த்த ஆதர்ஷ் ஹெக்டே தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு சுவாரஸ்யமான பதிவை வெளியிட்டுள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி, பலரும் பாராட்டி வருகின்றனர்.

Tags :
|
|
|
|