Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பப்புவா நியூ கினியாவில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம்

பப்புவா நியூ கினியாவில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம்

By: vaithegi Mon, 12 Sept 2022 3:54:55 PM

பப்புவா நியூ கினியாவில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம்

பப்புவா நியூ கினியா: பப்புவா நியூ கினியாவில் நேற்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது. பப்புவா நியூ கினியா ஒரு தீவு நாடாகும். இது ஆஸ்திரேலியாவிற்கு அருகே அமைந்துள்ளது. இந்த நிலையில், பப்புவா நியூ கினியா அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதனை அடுத்து இந்நிலநடுக்கரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக பதிவாகியது. இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 65 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

earthquake,papua new guinea ,நிலநடுக்கம் ,பப்புவா நியூ கினியா

மேலும் சில வினாடிகள் நீடித்த நிலநடுக்கத்தின்போது பப்புவா நியூ மினியாவில் வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. எனவே இதனால் பீதியடைந்த மக்கள் அலறியடித்தபடி வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.
அதன்படி மக்கள் இடிபாடுகளில் சிக்கி காயமடைந்துள்ளதாகவும், சில சுகாதார நிலையங்கள், வீடுகள், கிராமப்புற சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகள் ஆகியவை சேதம் அடைந்துள்ளதாகவும் ஐநா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்சார உட்கட்டமைப்பு சேதமடைந்துள்ளது, எனவே இதனால் கிழக்கு பகுதி முழுவதும் மின்தடை ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :