Advertisement

பிலிப்பைன்சில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

By: Nagaraj Sat, 18 Nov 2023 6:11:27 PM

பிலிப்பைன்சில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

பிலிப்பைன்ஸ்: பிலிப்பைன்ஸில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது குறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்ததாவது:

பிலிப்பின்ஸின் தெற்கு முனையிலுள்ள புரியாஸ் பகுதிக்கு 26 கி.மீ. தொலைவில் கடலுக்குள் சக்திவாய்ந்த நிலநடுக்கம் வெள்ளிக்கிழமை ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 6.7 அலகுகளாகப் பதிவானது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிலிப்பின்ஸ் நிலநடுக்கவியல் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த நிலநடுக்கம் 7.2 ரிக்டா் அளவு கொண்டதாக இருந்ததாகவும், 10 கி.மீ. ஆழத்தில் அது மையம் கொண்டிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளது.

ring of fire,philippines,earthquakes,warning ,நெருப்பு வளையம், பிலிப்பைன்ஸ், நிலநடுக்கங்கள், எச்சரிக்கை

இந்த நிலநடுக்கத்தால் பிலிப்பின்ஸின் பல்வேறு பகுதிகள் குலுங்கின. இருந்தாலும், உயிா்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை. நிலநடுக்கத்தின் விளைவாக சுனாமி ஏற்படும் என்ற எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.

புவித் தகடுகள் ஒன்றுடன் ஒன்று உராயும், ‘நெருப்பு வளையம்’ என்றழைக்கப்படும் பகுதியில் பிலிப்பின்ஸ் அமைந்துள்ளதால், அந்த நாட்டில் அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.

Tags :