Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கீழக்கரையில் மீன்பிடித்த மீனவர்கள் வலையில் சிக்கிய அரிய வகை டால்பின்கள்

கீழக்கரையில் மீன்பிடித்த மீனவர்கள் வலையில் சிக்கிய அரிய வகை டால்பின்கள்

By: Nagaraj Thu, 01 Dec 2022 6:31:24 PM

கீழக்கரையில் மீன்பிடித்த மீனவர்கள் வலையில் சிக்கிய அரிய வகை டால்பின்கள்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் மீன் பிடித்த மீனவர்கள் வலையில் இரண்டு அரிய வகை டால்பின்கள் சிக்கியது. இரண்டு டால்பின்களையும் கரைக்கு இழுத்துச் சென்ற மீனவர்கள் அவற்றை மீண்டும் கடலில் விட்டனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கீழ்க்கரை பகுதியை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். அப்போது மீனவர்கள் வகையில் பெரிய அளவிலான இரண்டு மீன்கள் கிடைத்தது.

கரையை அடைந்ததும் அது வலையில் சிக்கிய மீன் அல்ல என்பதை உணர்ந்தனர். இது அரிய வகை டால்பின் என்பதை அறிந்த மீனவர்கள் ஒன்றிணைந்து இந்த டால்பின்களை மீண்டும் கடலில் விட்டனர். மீன்களை மட்டும் தனியாக பிரித்து எடுத்து சென்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

dolphins,fishermen,ias officer supriya chagu ,, அரிய வகை டால்பின், ராமநாதபுரம், வலை

இந்த வீடியோவை ஐஏஎஸ் அதிகாரி சுப்ரியா சாகுவும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், “ராமநாதபுரம் மாவட்டம் கீழ்க்கரை பகுதியில் மீன்பிடி வலையில் சிக்கிய இரண்டு டால்பின் மீன்களை தமிழக வனக்குழுவினர் மற்றும் அப்பகுதி மீனவர்கள் இன்று வெற்றிகரமாக மீட்டு விடுதலை செய்தனர்.

இதுதான் சமூக ஈடுபாட்டின் மிகப்பெரிய சக்தி. இந்த உண்மையான மாவீரர்களை போற்றுவோம். டிஎஃப்ஓ ராமநாதபுரம் @TNForest என இடுகையிட்டுள்ளார்.

Tags :