Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சுதந்திர தினவிழாவை ஒட்டி சென்னையில் நடந்த ஒத்திகை நிகழ்ச்சி

சுதந்திர தினவிழாவை ஒட்டி சென்னையில் நடந்த ஒத்திகை நிகழ்ச்சி

By: Nagaraj Fri, 04 Aug 2023 8:34:27 PM

சுதந்திர தினவிழாவை ஒட்டி சென்னையில் நடந்த ஒத்திகை நிகழ்ச்சி

சென்னை: சென்னை காமராஜர் சாலையில் நடைபெற்ற சுதந்திர தினவிழா ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. சென்னை கோட்டையில் வரும் 15ம் தேதி சுதந்திர தின விழா நடக்கிறது.

சென்னை ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடி ஏற்றுகிறார். இந்நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) சுதந்திர தின விழாவின் முதல் நாள் ஒத்திகை தலைமைச் செயலகம் அமைந்துள்ள காமராஜர் சாலையில் நடைபெறுகிறது.

வாகன அணிவகுப்புடன் முதல்-அமைச்சரை அவரது இல்லத்திலிருந்து அழைத்து வருவது போல ஒத்திகை நடைபெற்றது. கமாண்டோ படை, குதிரைப்படை, பெண் காவல் படை உள்ளிட்ட 7 படை பிரிவுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர்.

ceremony,chennai,independence day,kamarajar,performance,rehearsal,road ,ஒத்திகை, காமராஜர், சாலை, சுதந்திர தினம், சென்னை, நிகழ்ச்சி, விழா

ஆகஸ்டு 10, 13 ஆகிய நாள்களில் விருது வழங்கும் நிகழ்ச்சிகளின் ஒத்திகை நடைபெறவுள்ளது. ஒத்திகை நடைபெறும் நாள்களில் காலை 6 மணி முதல் ஒத்திகை முடியும் வரை ராஜாஜி சாலையிலும், காமராஜர் சாலையிலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த நேரத்தில் நேப்பியர் பாலத்திலிருந்து போர் நினைவுச் சின்னம் வரை காமராஜர் சாலையிலும், போர் நினைவுச் சின்னத்திலிருந்து இந்திய ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வடக்கு பகுதி வரை அமையப் பெற்ற ராஜாஜி சாலையிலும், கொடிமரச் சாலையிலும் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

Tags :