Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஆசிரியர்களை அழைக்க வந்த பழுது நீக்க செல்லும் பழைய வாகனம்

ஆசிரியர்களை அழைக்க வந்த பழுது நீக்க செல்லும் பழைய வாகனம்

By: Nagaraj Wed, 27 May 2020 9:01:40 PM

ஆசிரியர்களை அழைக்க வந்த பழுது நீக்க செல்லும் பழைய வாகனம்

விடைத்தாள் திருத்தும் பணிக்கு வந்த ஆசிரியர்களை அழைத்துச் செல்ல வந்த பழுது நீக்க செல்லும் பேருந்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகத்தில், கடந்த மார்ச் மாதம் பிளஸ்2 பொதுத்தேர்வு நிறைவடைந்தது. கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால், விடைத்தாள் திருத்தும் பணி தள்ளிவைக்கப்பட்டது.

இந்நிலையில், மாநிலம் முழுவதும் பிளஸ்2 விடைத்தாள் திருத்தும் பணி இன்று துங்கியது. 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இந்தப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

teachers,primary education officer,vehicle,repair ,ஆசிரியர்கள், முதன்மைக்கல்வி அதிகாரி, வாகனம், பழுது நீக்கும்

'மையங்களுக்கு செல்ல ஆசிரியர்களுக்கு போக்குவரத்து வசதி இல்லையெனில், கார் ஏற்பாடு செய்யப்படும்' என, பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

கோவை மாவட்ட வால்பாறையிலிருந்து பொள்ளாச்சிக்கு விடைத்தாள் திருத்தும் பணி, 15 ஆசிரியர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. அதில், முதல்கட்டமாக இன்று, 3 ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணிக்குப் புறப்பட்டனர். ஆனால், அவர்களை அழைத்துச் செல்ல காரோ, அரசுப் பேருந்தோ ஏற்பாடு செய்யவில்லை. அரசுப் பேருந்துகளைப் பழுதுநீக்க, பழைய பேருந்து மாடலில் இருக்கும் வாகனம்தான், அவர்களுக்காக வந்துள்ளது.

இது ஆசிரியர்கள் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 'ஆசிரியர்களுக்காக காலை 6:30 மணிக்கு வால்பாறையிலிருந்து ஓர் அரசுப் பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆசிரியர்கள் தாமதமாக வந்ததால், அந்தப் பேருந்து கிளம்பிவிட்டதாகவும், அதன்பின், மாற்று ஏற்பாடாக ஒரு வாகனத்தை ஏற்பாடு செய்துள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து விசாரித்து வருகிறேன்' என, கோவை முதன்மைக் கல்வி அதிகாரி உஷா தெரிவித்துள்ளார்.

Tags :