Advertisement

சிறுநீரகங்கள் பாதித்த இளைஞர் முதல்வருக்கு கோரிக்கை

By: Nagaraj Mon, 10 July 2023 11:03:18 PM

சிறுநீரகங்கள் பாதித்த இளைஞர் முதல்வருக்கு கோரிக்கை

தூத்துக்குடி: முதல்வருக்கு கோரிக்கை... தூத்துக்குடி மாவட்டம், சாத்தான் குளம் அருகே இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த இளைஞர் ஒருவர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு முதலமைச்சர் உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

தச்சன்விளை கிராமத்தை 30 வயதான முத்துக்கிருஷ்ணனுக்கு கடந்த 2019ஆம் ஆண்டு இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்ததாகவும் கலைஞர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் வாரம் இரண்டு நாட்கள் ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

pettikadai,sister,muthukrishnan,kidney damage ,பெட்டிக்கடை, தங்கை, முத்துக்கிருஷ்ணன், கிட்னி பாதிப்பு

மகனின் உடல்நிலை குறித்த கவலையால் முத்துகிருஷ்ணனின் தாய் உயிரிழந்து விட்டார்.

வயதான தந்தை மற்றும் திருமணமாகாத தங்கையுடன் வீட்டு வாசலில் சிறிய பெட்டிக்கடை வைத்து வாழ்க்கையை நடத்தி வருகிறார்.

Tags :
|