Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தங்கத்தில் மாஸ்க் செய்து அணிந்து வரும் புனேயைச் சேர்ந்த பணக்காரர்

தங்கத்தில் மாஸ்க் செய்து அணிந்து வரும் புனேயைச் சேர்ந்த பணக்காரர்

By: Karunakaran Sat, 04 July 2020 3:01:31 PM

தங்கத்தில் மாஸ்க் செய்து அணிந்து வரும் புனேயைச் சேர்ந்த பணக்காரர்

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா பரவலை தடுக்க பல்வேறு வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. இதில் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு வைரஸ் கிருமிகள் பரவாமல் தடுக்க முக கவசம் அணிய அறிவுறுத்தப்படுகிறது.

சிலர் கைக்குட்டை, துப்பட்டா, டவல், முந்தானை என தங்களிடம் இருப்பதையே மாஸ்க்காக பயன்படுத்தி வருகின்றனர். பல்வேறு வடிவங்கள் மற்றும் பல்வேறு தரங்களில் இந்த முக கவசம் தயாரிக்கப்படுகிறது. இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம் புனேயைச் சேர்ந்த சங்கர் குரேட் என்பவர் தங்கத்தினால் மாஸ்க் தயாரித்து அதனை அணிந்து வருகிறார்.

rich man,corona mask,gold mask,pune ,பணக்காரன், கொரோனா மாஸ்க், தங்க மாஸ்க், புனே

இந்த தங்க மாஸ்க்கின் மதிப்பு ரூ.2.89 லட்சம் ஆகும். இதில் சிறிய சிறிய துளைகள் இடப்பட்டுள்ளன. இந்த மாஸ்க்கினால் சுவாசிப்பதில் அவருக்கு பிரச்சனை இல்லை. இருப்பினும் கொரோனாவிலிருந்து இது சந்தேகம்தான் என அவர் தெரிவித்துள்ளார். தங்க நகைகள் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர் என்பதால், தங்க மாஸ்க் அணிந்துள்ளார்.

அவர் தங்க மாஸ்க் அணிந்து போஸ் கொடுக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. இதுகுறித்து பலரும் கருத்துக்களை கேலியும் கிண்டலுமாக பதிவு செய்து வருகின்றனர். இந்தியாவில் கொரோனா வைரசால் 6.5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில், புனேயில் மட்டும் சுமார் 6000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்,

Tags :