Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கிழந்த ஆடைகளை தைத்து பயன்படுத்துபவர்களுக்கு கொடுப்பனவு வழங்கும் திட்டம்

கிழந்த ஆடைகளை தைத்து பயன்படுத்துபவர்களுக்கு கொடுப்பனவு வழங்கும் திட்டம்

By: Nagaraj Sun, 16 July 2023 2:56:58 PM

கிழந்த ஆடைகளை தைத்து பயன்படுத்துபவர்களுக்கு கொடுப்பனவு வழங்கும் திட்டம்

பிரான்ஸ்: கொடுப்பனவு வழங்கும் திட்டம்... கிழிந்த ஆடைகளைத் தைத்து மீண்டும் பயன்படுத்துபவர்களுக்கு 6 யூரோக்கள் முதல் 25 யூரோக்கள் வரையில் (இலங்கை மதிப்பில் 2,500 ரூபாயில் இருந்து 8,900 ரூபாய் வரை) கொடுப்பனவு வழங்கும் திட்டத்தினை பிரான்ஸ் அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

இப்புதிய திட்டம் வருகின்ற அக்டோபர் மாதம் முதல் அமுலுக்கு வர உள்ளதாகக் கூறப்படுகிறது. பிரான்ஸில் வருடத்திற்கு 7 லட்சம் தொன் ஆடைகள் குப்பையில் வீசப்படுவதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

france,government,project,support,clothing,announcement ,பிரான்ஸ், அரசு, திட்டம், ஆதரவு, ஆடைகள், அறிவிப்பு

இந்நிலையில் இவ்வாறு ஆடைகள் வீசப்படுவதைத் தடுக்கும் விதமாகவே பிரான்ஸ் அரசு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலமாக அரசுக்கு ஐந்து வருடத்திற்கு 154 மில்லியன் யூரோக்கள் செலவாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசின் இத் திட்டத்திற்கு பலரும் தமது ஆதரவினைத் தெரிவித்து வருகின்றனர்.

Tags :
|