Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மகாராஷ்டிரா மக்களுக்கு காத்திருக்கும் ஷாக்... மின் கட்டணம் உயர்த்த முடிவு

மகாராஷ்டிரா மக்களுக்கு காத்திருக்கும் ஷாக்... மின் கட்டணம் உயர்த்த முடிவு

By: Nagaraj Mon, 11 July 2022 08:28:11 AM

மகாராஷ்டிரா மக்களுக்கு காத்திருக்கும் ஷாக்... மின் கட்டணம் உயர்த்த முடிவு

மும்பை: மின் கட்டணம் அதிகரிக்க வாய்ப்பு... மகாராஷ்டிரம் மாநிலத்தில் இந்த மாதம் முதல் 10 முதல் 20 சதவீதம் வரை மின் கட்டணத்தை அதிகரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நாடு முழுவதும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிலக்கரி தட்டுப்பாடு நிலவியது. இதன் காரணமாக கூடுதல் விலைக்கு வெளிநாடுகளில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டது.

இதனை கருத்தில் கொண்டு மகாராஷ்டிர மாநில மின் ஒழுங்குமுறை ஆணையம்(எம்இஆர்சி) எரிபொருள் சரிசெய்தல் கட்டணங்களை (எப்ஏசி) விதிக்க மின் நிறுவனங்களுக்கு ஜூன் 1 ஆம் தேதி ஒப்புதல் அளித்தது. இதையடுத்து மகாராஷ்டிரத்தில் குடியிருப்பு, வணிகம், தொழில்துறை போன்ற அனைத்து மின் பயனாளர்களுக்கும் மாதாந்திர மின் கட்டணம் குறைந்தபட்சம் 10 முதல் அதிகபட்சம் 20 சதவீதம் வரை அதிகரிக்க உள்ளது.

fares,infections,petrol,diesel price,electricity ,கட்டணம், நோய் தொற்று, பெட்ரோல், டீசல் விலை, மின்சாரம்

அதாவது, ஒரு யூனிட்டுக்கு ரூ.1 அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இந்த கட்டண உயர்வு ஜூலை மாதம் முதலே அமலுக்கு வரும் என கூறப்படுகிறது. எரிபொருள் சரிசெய்தல் கட்டணங்களை விதிக்க மின் ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்திருந்தாலும், அது காலாண்டு அடிப்படையில் இருக்கும் என்றும், அடுத்த மூன்று மாதங்களில் ஒட்டுமொத்த தொகையை சமமாக வசூலிக்க ஒழுங்குமுறை ஆணையம் அனுமதிக்கும் என்று கூறப்படுகிறது.

மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களின் மின் பயன்பாடுகள் கணக்கிடப்பட்டு நவம்பர் வரையிலான ஐந்து மாதங்களில் முழு கட்டணமும் வசூலிக்கப்படும். மின் கட்டண உயர்வு காரணமாக மும்பை பெருநகரில் மட்டும் பத்தரை லட்சம் பெஸ்ட் நிறுவன வாடிக்கையாளர்கள், 7 லட்சத்திற்கும் அதிகமான டாடா நிறுவன வாடிக்கையாளர்கள், 29 லட்சம் அதானி நிறுவன வாடிக்கையாளர்கள் மற்றும் மகாராஷ்டிரத்தில் 2.8 கோடி எம்எஸ்இ.டி.சி.எஸ் நிறுவன வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுவார்கள்.

மகாராஷ்டிராவில் உள்ள 10.5 லட்சம் சிறந்த வாடிக்கையாளர்கள், 7 லட்சத்துக்கும் அதிகமான டாடா பவர் வாடிக்கையாளர்கள், 29 லட்சம் அதானி மின்சார வாடிக்கையாளர்கள் மற்றும் 2.8 கோடி எம்எஸ்இடிசிஎல் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுவார்கள்.

சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மின் கட்டண உயர்வு பேரிடியாக அமையும். கொரோனா நோய்த்தொற்று காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக வாடிக்கையாளர்களிடம் சரிசெய்தல் கட்டணம் வசூலிக்கப்படவில்லை.

Tags :
|
|