Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய இருப்பவர்களுக்கு ஷாக் அப்டேட்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய இருப்பவர்களுக்கு ஷாக் அப்டேட்

By: vaithegi Wed, 04 Oct 2023 4:48:50 PM

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய இருப்பவர்களுக்கு ஷாக் அப்டேட்

சென்னை: தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிடுவார்கள். நெடுந்தூர பயணங்கள் என்றாலே ரயில்கள் தான் மக்களின் முதல் விருப்பமாக இருக்கும்.

இதையடுத்து தற்போது ஆம்னி பேருந்துகளின் கட்டண அதிகரிப்பால் பலர் ரயில்களில் பயணம் செய்ய விரும்புகின்றனர். மேலும் வழக்கமான நாட்களில் ரயில்களில் 20 நாட்களுக்கு முன்னதாக டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.

reservation,diwali festival,train ticket ,முன்பதிவு ,தீபாவளி பண்டிகை, ரயில் டிக்கெட்

ஆனால் தீபாவளி பண்டிகையில் பயணிகளின் எண்ணிக்கை அதிகம் என்பதால், கடந்த ஜூலை 12 ஆம் தேதி முதல் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என அறிவிப்பு வெளியானது. டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நாட்களில் டிக்கெட் அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்டு, வெயிட்டிங் லிஸ்ட் நீண்டு கொண்டே செல்கிறது.

அதனால் பெரும்பான்மையான மக்கள் டிக்கெட் இல்லாமல் பெரு சிரமத்தில் இருக்கின்றனர். மேலும் அது மட்டுமில்லாமல் IRCTC மேலும் பெட்டிகளை இணைத்து டிக்கெட்டை அதிகப்படுத்த வேண்டும் எனவும், கூடுதல் ரயில்கள் இயக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags :