Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • குடியரசு தலைவர் மாளிகையை மக்கள் மாளிகையாக மாற்றிய எளிமையான ஜனாதிபதி

குடியரசு தலைவர் மாளிகையை மக்கள் மாளிகையாக மாற்றிய எளிமையான ஜனாதிபதி

By: Nagaraj Thu, 27 July 2023 2:17:37 PM

குடியரசு தலைவர் மாளிகையை மக்கள் மாளிகையாக மாற்றிய எளிமையான ஜனாதிபதி

சென்னை: குடியரசு தலைவர் மாளிகையை "மக்கள் மாளிகை"யாக மாற்றி எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து காட்டியவர் மறைந்த மக்கள் ஜனாதிபதி கலாம்.

சிறந்த விஞ்ஞானியாக - அதிலும் குறிப்பாக அணுசக்தி துறையின் ஆற்றல் மிக்க வல்லுனராக - தேசத்தின் திறமைமிக்க நிர்வாகியாக - எதிர்காலத்தின் எழிலார்ந்த இந்தியாவிற்காக தினம் தினம் கனவு காணும் தேசபக்தராக திகழ்ந்தவர் டாக்டர் அப்துல் கலாம்.

இந்திய திருநாட்டின் முதல் குடிமகனாக - ஜனாதிபதியாக - பதவி வகித்த 5 ஆண்டுகளும் மறக்க முடியாதவை. குடியரசு தலைவர் மாளிகையை "மக்கள் மாளிகை"யாக மாற்றி எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து காட்டியவர் கலாம்.

ஜாதீய பலமோ - மதத்தின் பின்பலமோ - கோடீஸ்வர பின்னணியோ இல்லாமல் சாதாரண குடும்பத்தில் இந்தியாவின் கடைகோடியில் பிறந்து - குடியரசு தலைவர் வரை சொந்த உழைப்பாலும், திறமையாலும் உயர்ந்தவர் டாக்டர் கலாம்.

peoples house,president,kudankulam,president,public life ,மக்கள் மாளிகை, குடியரசு தலைவர், கூடங்குளம், ஜனாதிபதி, பொது வாழ்வு

விடியற்காலையில் விழித்தெழுந்து, வீடு வீடாக செய்தித்தாள்களை விநியோகித்து - தமிழ்மொழியில் பயின்று - விஞ்ஞான மேதையாக வளர்ந்தவர் டாக்டர் கலாம். தனது ஆற்றல் மிக்க உரைகளால் மறைந்த வி.கே.கிருஷ்ணமேனனுக்குப் பிறகு உலக நாடுகளை தனது சிந்தனை மிக்க உரைகளால் இந்தியாவையே நிமிர வைத்தவர் அப்துல்கலாம்.

பதவியிலிருந்து ஓய்வு பெற்றபிறகு தன் கடமையிலிருந்து தவறாமல் தொடர்ந்து பாடுபட்டவர் டாக்டர் அப்துல் கலாம்.நாட்டை பற்றியும், எதிர்காலம் குறித்தும் இளைஞர்களுக்கு ஏராளமான அறிவுரைகளையும், ஆலோசனைகளையும், வழங்கியவர் டாக்டர் அப்துல்கலாம்.

இதுவரை எல்லா குடியரசு தலைவர்களும் ஓய்வுபெற்ற பிறகு, உண்மையாகவே ஓய்வு பெற்று பொதுவாழ்விலிருந்து ஒதுங்கியே வாழ்ந்தாலும் ஓய்வு பெறாமல் பொதுவாழ்விற்கு தம்மை முழுமையாக அர்ப்பணித்து கொண்டவர் டாக்டர் கலாம்.

தேசத்தின் மிக முக்கிய இரண்டு பிரச்சனையான முல்லை பெரியாறு அணை விவகாரம், கூடங்குளம் அணுமின்நிலைய பிரச்சனைக்கு மிக முக்கிய ஆலோசனைகளையும் மகத்தான தீர்வுகளையும் முன்வைத்தவர் டாக்டர் கலாம். அதனால்தான் அவரை மக்களின் ஜனாதிபதி என்று சொல்கிறோம்.

Tags :