Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மத்திய கொலம்பியாவில் விபத்தில் சிக்கிய சிறிய ரக விமானம்

மத்திய கொலம்பியாவில் விபத்தில் சிக்கிய சிறிய ரக விமானம்

By: Nagaraj Thu, 20 July 2023 9:23:25 PM

மத்திய கொலம்பியாவில் விபத்தில் சிக்கிய சிறிய ரக விமானம்

கொலம்பியா: மத்திய கொலம்பியாவில் நேற்று சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் 5 அரசியல்வாதிகள் மற்றும் ஒரு விமானி உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த ஐந்து பேரும் முன்னாள் ஜனாதிபதி அல்வாரோ யூரிபின் வலதுசாரி சென்ட்ரோ டெமக்ராட்டிகோவின் உறுப்பினர்கள் ஆவார்கள்.

colombia,crash,plane,small ,கொலம்பியா, சிறியரகம், விபத்து, விமானம்

அவர்கள் போயாகா துறையில் சான் லூயிஸ் டி காசினோ என்ற முனிசிபல் பகுதியில் சிறியரக விமானத்தில் பயணித்துக்கொண்டிருந்தபோது விமானம் விபத்துக்குள்ளானதாக சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து டிவிட்டரில் அக்கட்சி வருத்தம் தெரிவித்தது. மேலும், விமானம் விலாவிசென்சியோவில் இருந்து பொகோடாவிற்கு கட்சி கூட்டத்திற்காகச் சென்று கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இடதுசாரி தலைவர் குஸ்டாவோ பெட்ரோ தனது டிவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Tags :
|
|