Advertisement

பிரேத பரிசோதனை பெண் ஊழியரை தெறித்து ஓட விட்ட பாம்பு

By: Nagaraj Thu, 08 Dec 2022 11:08:38 AM

பிரேத பரிசோதனை பெண் ஊழியரை தெறித்து ஓட விட்ட பாம்பு

அமெரிக்கா: இறந்தவரின் தொடையில் இருந்து உயிருடன் வெளியே வந்த பாம்பை கண்டு பிரேத பரிசோதனை ஊழியரான பெண்.அலறி அடித்துக் கொண்டு ஓடியுள்ளார். இதை அவரே தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் மருத்துவமனை ஒன்றில் பிரேத பரிசோதனை செய்யும் ஊழியராக ஜெசிகா லோகன் என்ற 31 வயது பெண் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், தனக்கு நேர்ந்த ஒரு திகில் அனுபவத்தை ஜெசிகா பற்றி பகிர்ந்துள்ளார். அதாவது ஒரு முறை, இறந்தவரின் உடலில் பிரேத பரிசோதனை செய்துக் கொண்டிருந்தபோது, அந்த உடலில் இருந்து பாம்பு ஒன்று உயிருடன் வெளிவருவதை பார்த்துள்ளார்.

பாம்பு அந்த நபரின் தொடை பகுதியிலிருந்து வெளிவந்ததை பார்த்த ஜெசிகா அலறி அடித்துகொண்டு ஓடி உள்ளார். பின்னர் பணியாளர்கள் வந்து பாம்பை பிடித்து அகற்றிய பிறகே மீண்டும் தன் வேலையை தொடர இறந்த உடலின் அருகில் சென்றதாக அவர் தெரிவித்துள்ளார்.

dead body,thigh,live snake,autopsy,female servant ,இறந்த உடல், தொடை, உயிருடன் பாம்பு, பிரேத பரிசோதனை, பெண் ஊழியர்

குறித்த உடல் ஒரு ஓடை அருகில் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டு உள்ளது. அப்போது அந்த உடலுக்குள் அந்த பாம்பு புகுந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. தன் அனுபவம் குறித்து பேசிய ஜெசிகா, "இறந்தவர்களின் உடல்கள் எங்கு எந்த நிலையில் கண்டெடுக்கப்படுகிறது என்பதை பொறுத்து தான் இம்மாதிரியான சம்பவங்கள் நடக்கக்கூடும் என்றார்.

குளிரான, உலர்ந்த இடங்களில் உடல்கள் இருந்தால், பூச்சிகள், ஆபத்தான உயிரினங்கள் பிரேதங்களை அணுகாது. ஆனால், சூடான, ஈரப்பதமான இடங்களில் பூச்சிகள் உடலில் அதிகம் இருக்கும்." என்றார். டாக்டராக வேண்டும் என நினைத்த ஜெசிகாவுக்கு, குடும்பத்தின் பொருளாதார சூழல் காரணமாக படிப்பை பாதியில் நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பிரேத பரிசோதனையாளராக ஜெசிகா பணியாற்றி வருகிறாராம் .

Tags :
|