Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்த மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க இந்த மாதம் 4 நாட்களுக்கு சிறப்பு முகாம்

இந்த மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க இந்த மாதம் 4 நாட்களுக்கு சிறப்பு முகாம்

By: vaithegi Sat, 05 Nov 2022 2:06:24 PM

இந்த மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க இந்த மாதம் 4 நாட்களுக்கு சிறப்பு முகாம்

காஞ்சீபுரம் : சிறப்பு முகாம் .... காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த பணி நடைபெற இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே அதன் படி 2023 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள்

இதனை அடுத்து இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காமல் இருந்தால் இந்த சிறப்பு முகாமில் கலந்து கொள்ளலாம். அதன்படி பெயர் சேர்க்க படிவம் 6, பெயர் நீக்கம் செய்ய படிவம் 7, வாக்காளர் பட்டியலில் உள்ள பிழைகள், தொகுதி மாற்றம் மற்றும் முகவரி மாற்றம் செய்ய படிவம் 8 ஆகியவற்றை பூர்த்தி செய்து வாக்குசாவடிகளில் வழங்க வேண்டும்.

special camp,kancheepuram ,சிறப்பு முகாம்,காஞ்சீபுரம்

இதையடுத்து இந்த சிறப்பு முகாம் அந்தந்த பகுதிகளில் அமைந்துள்ள, கல்வி நிலையங்களில் வருகிற 12, 13, 26 மற்றும் 27 ஆம் தேதிகளில் நடைபெறும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாக்குபட்டியலில் பெயர் சேர்க்க முகாம்களுக்கு நேரடியாக வந்து உரிய படிவத்தினை பெற்று பூர்த்தி செய்து உரிய சான்று ஆவணங்களுடன் அலுவலர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று காஞ்சீபுரம் கலெக்டர் மா.ஆர்த்திஎ அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Tags :