Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான சிறப்பு கலந்தாய்வு இன்று நடைபெறுகிறது

மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான சிறப்பு கலந்தாய்வு இன்று நடைபெறுகிறது

By: vaithegi Thu, 27 July 2023 09:54:31 AM

மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான சிறப்பு கலந்தாய்வு இன்று நடைபெறுகிறது

சென்னை : மருத்துவ படிப்புகளுக்கான 7.5% இட ஒதுக்கீட்டில், அரசுப்பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வு இன்று சென்னையில் நடக்கிறது ... சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் பொறியியல் கல்லூரிகளில் நடப்பு கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவானது , கடந்த மே மாதம் 5-ம் தேதி முதல் ஜூன் 4-ம் தேதி வரை நடைபெற்றது. இதனை அடுத்து இதில் சுமார் 1 லட்சத்து 87 ஆயிரத்து 847 பேர் பொறியியல் படிப்பில் சேர விண்ணப்ப கட்டணத்துடன், சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்தனர்.

இதையடுத்து இவர்களிலிருந்து 1 லட்சத்து 78 ஆயிரத்து 959 பேர் கலந்தாய்வு பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.இவர்களுக்கான தரவரிசை பட்டியல் கடந்த ஜூன் 26 -ம் தேதி வெளியிடப்பட்ட நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் கலந்தாய்வு கடந்த 22 -ம் தேதி முதல் தொடங்கியது.

consultation,medical course ,கலந்தாய்வு ,மருத்துவப் படிப்பு

இந்த நிலையில் மருத்துவ படிப்புகளுக்கு சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் 3 சுற்றுகளாக இன்று தொடங்கியது. மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு ஜூலை 25-ம் தேதி ஆன்லைனில் தொடங்கிய நிலையில் இன்று சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு மட்டும் கலந்தாய்வில் நேரில் நடைபெறுகிறது.

மேலும் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் 90 பேர் தங்களிடங்களை தேர்வு செய்து உள்ளனர்.மருத்துவ படிப்பு சிறப்பு கலந்தாய்வுக்காக காலையிலேயே அரசு பள்ளி மாணவர்கள் பலர் குவிந்து உள்ளனர்.


Tags :