Advertisement

தமிழகத்தில் குழந்தைகளுக்கு சிறப்பு திட்டம் தொடக்கம்

By: vaithegi Mon, 21 Nov 2022 4:33:12 PM

தமிழகத்தில் குழந்தைகளுக்கு சிறப்பு திட்டம் தொடக்கம்

சென்னை: சிறப்பு திட்டம் .... தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் குழந்தைகளுக்கு சத்து நிறைந்த மதிய உணவு வழங்கப்பட்டு கொண்டு வருகிறது. அந்த உணவில் முட்டை, பயிறு வகைகளும் வழங்கப்பட்டு வருகிறது.

இதனை அடுத்து அதே போன்று அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு காய்கறி உணவு மற்றும் சத்து மாவு உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டு கொண்டு வருகிறது. இந்நிலையில் பள்ளிகளில் குழந்தைகளுக்கு காலை உணவையும் அளிக்கும் பொருட்டு சிற்றுண்டி திட்டம் அண்மையில் கொண்டு வரப்பட்டது.

children,first , குழந்தைகள்,முதல்வர்

அதனை தொடர்ந்து தற்போது ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு பிஸ்கட் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் ஒன்று நடைபெற்றது. அதில் பேசிய முதல்வர் எந்த திட்டமாக இருந்தாலும் கடைக்கோடி மக்களை சென்றடைய வேண்டும் என்பதே எங்கள் நோக்கம் என தெரிவித்துள்ளார்.

தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் தமிழ்நாட்டில் பொது விநியோக திட்டத்துடன் இணைந்து செயல்படுத்தப்படுகிறது. எனவே இதன் கீழ் மேலும் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு சத்துக்கள் அடங்கிய செறிவூட்டப்பட்ட பிஸ்கட் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் அத்துடன் இந்த கூட்டத்தில் அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு வாரம் இனி 3 முட்டைகள் வழங்கும் திட்டமும் தொடங்கப்பட்டுள்ளது.

Tags :