Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பெண்களுக்கான ஸ்பெஷல் காலணி... மாணவியின் சூப்பர் கண்டுபிடிப்பு

பெண்களுக்கான ஸ்பெஷல் காலணி... மாணவியின் சூப்பர் கண்டுபிடிப்பு

By: Nagaraj Thu, 15 Dec 2022 11:47:19 AM

பெண்களுக்கான ஸ்பெஷல் காலணி... மாணவியின் சூப்பர் கண்டுபிடிப்பு

கர்நாடகா: யாராவது ஒரு பெண்ணைத் தாக்க முற்படும்போது, அல்லது பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானால், அந்தப் பெண் இந்த ஷூவால் எதிராளியை உதைக்க வேண்டும். அப்போது இந்த காலணிகளில் இருந்து வெளியாகும் மின்சாரம் எதிராளியின் மீது பாய்ந்து அவர்களை நிலைகுலையச் செய்யும்.

பாலியல் தொல்லைகளில் இருந்து பெண்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ளும் விதமாக, கர்நாடகாவை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவி விஜயலட்சுமி, பிரத்யேக எலக்ட்ரிக் ஷூவை உருவாக்கியுள்ளார். கலபுரகியைச் சேர்ந்த மாணவி விஜயலட்சுமி, தனது கண்டுபிடிப்பு குறித்து கூறுகையில், ‘யாராவது ஒரு பெண்ணைத் தாக்க முற்படும்போது, அல்லது பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானால், அந்தப் பெண் இந்த ஷூவால் எதிராளியை உதைக்க வேண்டும்.

அப்போது இந்த காலணிகளில் இருந்து வெளியாகும் மின்சாரம் எதிராளியின் மீது பாய்ந்து அவர்களை நிலைகுலையச் செய்யும். இதற்கு தேவையான மின்சாரம் பேட்டரிகள் மூலம் காலணிகளின் வழியாக அனுப்பப்படுகிறது.

bengaluru,shoe,vijayalaksmi, ,காலணி, பெங்களூர், விஜயலட்சுமி

குற்றவாளிகளை எதிர்த்துப் போராட பெண்களுக்கு உதவும். இந்த காலணிகளை அணிந்து கொண்டு நடக்கும்போது பேட்டரி சார்ஜ் ஆகிவிடும்’ என்றார்.

இது தவிர ஜி.பி.எஸ். வசதியும் இருக்கிறது. அது பெண்ணின் இருப்பிடம் பற்றிய தகவலை பெற்றோருக்கு அனுப்பும். 2018 ஆம் ஆண்டு விஜயலட்சுமி இந்த சிறப்பு காலணியை உருவாக்கும் முயற்சியை தொடங்கினார்.

இந்தக் கண்டுபிடிப்புக்காக அவர் பல பதக்கங்களைப் பெற்றுள்ளார். சமீபத்தில் கோவாவில் தனது கண்டுபிடிப்புக்காக சர்வதேச விருதை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
|