Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இன்றும், நாளையும் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறுகிறது

இன்றும், நாளையும் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறுகிறது

By: vaithegi Sat, 25 Nov 2023 11:11:06 AM

இன்றும், நாளையும் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறுகிறது

சென்னை: நாடு முழுவதும் அடுத்தாண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் ஆணையம் அதற்கான முன்னேற்பாடுகளை செய்து கொண்டு வருகிறது. இதையடுத்து இந்த சூழலில் தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 27-ஆம் தேதி வெளியிடப்பட்டது.

வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு ஜனவரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் , இதற்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளதாகவும், இதில் பெயர் சேர்த்தல், நீக்குதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

voter special camp,name addition,deletion ,வாக்காளர் சிறப்பு முகாம், பெயர் சேர்த்தல், நீக்குதல்

இந்நிலையில் தமிழ்நாட்டில் திருவண்ணாமலை மாவட்டத்தை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் நவ.25,வருகிற 26-ஆம் ஆகிய தேதிகளில் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

இதனை அடுத்து தீபத்திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் டிச.2,3ல் சிறப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Tags :