Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் குரங்கு அம்மைக்கு சிறப்பு வார்டு தயார்..

ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் குரங்கு அம்மைக்கு சிறப்பு வார்டு தயார்..

By: Monisha Sat, 16 July 2022 6:02:44 PM

ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் குரங்கு அம்மைக்கு சிறப்பு வார்டு தயார்..

தமிழ்நாடு: இந்தியாவில் முதல் தொற்று கடந்த 2ம் தேதி அரபு நாட்டிலிருந்து திருவனந்தபுரம் வந்த குழந்தைக்கு உறுதியானது. தமிழக கேரள எல்லையில் 13 இடங்களில் குரங்கு அம்மை கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கேரள விமானங்களில் வருவோரும் கண்காணிக்கப்படுகின்றனர்.

சென்னை, மதுரை, கோவை, திருச்சி பன்னாட்டு விமான நிலையங்களில் 2 விழுக்காடு நபர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்படுகிறது. காய்ச்சல், குரங்கம்மைக்கு சேர்த்து பரிசோதனை செய்யப்படுகிறது.மேலும் பாதிப்பு அதிகம் கொண்ட குறிப்பிட்ட நாட்டில் இருந்து வருவோரில் முகம் கையில் கொப்பளம் உள்ளதா என ஆய்வு செய்யப்படுகிறது.

monkey pox,hospital,ward,ready ,அரசு, மருத்துவமனை,குரங்கு அம்மை,
வார்டு,

சென்னைக்கு ஜூலை மாதம் தினம்தோறும் 30-40 விமானம் மூலம் 5000-9 000 பயணியர் வருகை புரிகின்றனர். இந்த மாதத்தில் சென்னைக்கு 531 விமானம் மூலம் 1லட்சத்து 153 பயணியர் வருகை தந்துள்ளனர். அதில் 1987 பேர் பரிசோதனை செய்யப்பட்டனர் . 39 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது” என்று கூறினார்.

அதனைத் தொடர்ந்து பேசியவர், “ குரங்கு அம்மைக்கு சென்னையில் ஒரு ஆய்வகம் அமைக்க மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். சென்னையில் குரங்கு அம்மைக்கு ஒரு சிறப்பு வார்டு 10 படுக்கையுடன் ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் நேற்றிரவு தயாராகியுள்ளது என்றார்.

Tags :
|