Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஜி.எஸ்.டி., குறித்து மத்திய அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை

ஜி.எஸ்.டி., குறித்து மத்திய அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை

By: Nagaraj Mon, 03 Apr 2023 10:06:14 AM

ஜி.எஸ்.டி., குறித்து மத்திய அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை

புதுடில்லி: சரக்கு மற்றும் சேவைகள் வாரியான ஜி.எஸ்.டி., வரி வசூல் குறித்த மத்திய அமைச்சகத்தின் விரிவான அறிக்கையானது வெளியாகி உள்ளது.

கடந்த 2017-ம் ஆண்டு முதல் நாட்டில் GST வரி விதிப்பு அமலில் உள்ளது. மக்கள் செலுத்தி வரும் பல வரிகளும் மாற்றி அமைக்கப்பட்டு ஒரே GST வாரியாக வசூல் செய்யப்படுகிறது.

இதனால் மாநில அரசுகள் வசம் இருந்த வரி வசூல் முறையானது மத்திய அரசின் வசம் மாறி உள்ளது. மற்ற வரி இழப்பீடுகளை மாநில அரசுகள் ஈடு செய்யும் விதமாக ஆண்டுதோறும் மாநில வாரியாக மத்திய அரசு GST இழப்பீடு தொகையை ஒதுக்கி கொண்டு வருகிறது.

tax collection,gst ,வரி வசூல்,ஜி.எஸ்.டி, அறிக்கை, மத்திய அரசு

இந்த நிலையில், கடந்த 2022 – 2023-ம் நிதியாண்டின் வரி வசூல் குறித்த அதிகாரபூர்வ அறிக்கையை மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. எனவே அதன்படி, மார்ச் மாதம் மிகவும் அதிகப்படியான, இதுவரை பதிவான வரி வசூல் கணக்கீடுகளில் 2-ம் இடத்தை பிடித்துள்ளது. அந்த அறிக்கையின் படி, மார்ச்சில் 1 லட்சத்து 60 ஆயிரத்து 122 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது. 2022 மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 15% அதிகம் ஆகும்.

இந்த மார்ச் மாதத்தில் 29 ஆயிரத்து 546 கோடி ரூபாய் மத்திய அரசின் GST வசூலாகவும், 37 ஆயிரத்து 314 கோடி ரூபாய் மாநில அரசின் GST வசூலாகவும், 82 ஆயிரத்து 907 கோடி ரூபாய் ஒருங்கிணைந்த GST வசூலாகவும் உள்ளது.

Tags :