Advertisement

சென்னையில் இறங்கிய வினோத விமானம்..திமிங்கலம் விமானம்..

By: Monisha Tue, 12 July 2022 7:15:03 PM

சென்னையில் இறங்கிய வினோத விமானம்..திமிங்கலம் விமானம்..

சென்னை: சென்னை சர்வதேச விமான நிலையத்தில் நேற்று தரையிறங்கிய ஒன்று பயணிகள் இடையிலும், மக்கள் இடையிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. 86,500 கிலோ எடை, 864.36 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும் திறன். சராசரியாக 150 டன் வரை சரக்கு ஏற்ற கூடிய ராட்சச விமானம்தான் ஏர்பஸ் நிறுவனத்தின் ஏர்பஸ் பெலுகா.இது பார்ப்பதற்கு அப்படியே வெள்ளை நிற திமிங்கலம் போல பெரிய மூக்கு கொண்டு இருந்தது.
பார்க்க ராட்சச திமிங்கலம் போல காட்சி அளிக்கும் இந்த பெலுகா விமானம் ஒரு சரக்கு விமானம் ஆகும். வெள்ளை நிறத்தில் ராட்சச தோற்றம் கொண்ட இதில் 2 பைலட்டுகளை மட்டுமே பயணிக்க முடியும். மற்றபடி இது சரக்கு ஏற்றி செல்லும் விமானம்.

chennai,whale,plane,goods ,சர்வதேச, விமானம்,  பெலுகா,ஏர்பஸ் ,

சிங்கப்பூர் நோக்கி சென்ற இந்த விமானம். வேறு ஒரு லோடை முடித்துவிட்டு. எந்த சரக்கும் இல்லாமல் மீண்டும் சிங்கப்பூர் நோக்கி திரும்பி சென்றுள்ளது.இடையில்தான் சென்னையில் எரிபொருள் நிரப்பி இருக்கிறது.


சென்னையில் முதல்முறை இந்த ராட்சச ஏர்பஸ் பெலுகா விமானம் தரையிறங்கியது குறிப்பிடத்தக்கது. ஏர்பஸ் பெலுகா விமானம் டேக் அப் மற்றும் லேண்டிங்கின் போது அதிக ஒலி எழுப்பும்.நேற்றும் இந்த விமானம் தரையிறங்கிய போது அதிக சத்தம் வந்தது. இது அனைவரையும் கவர்ந்தது.

Tags :
|
|