Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கம் 1000க்கும் மேற்பட்ட உயிரிழப்பு இன்னும் அதிகரிக்க வாய்ப்பு

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கம் 1000க்கும் மேற்பட்ட உயிரிழப்பு இன்னும் அதிகரிக்க வாய்ப்பு

By: vaithegi Wed, 22 June 2022 7:16:03 PM

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கம்  1000க்கும் மேற்பட்ட உயிரிழப்பு இன்னும் அதிகரிக்க வாய்ப்பு

ஆப்கானிஸ்தான்: ஆப்கானிஸ்தானில் இன்று (ஜூன் 22) அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சுமார் 1000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல்கள் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் சுமார் 6.1 பதிவு செய்யப்பட்டுள்ள

இந்த திடீர் நிலநடுக்கத்தால் 1500 பேர் காயமடைந்துள்ளதாக அரசு நடத்தும் செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள கோஸ்ட் நகரில் இருந்து சுமார் 44 கிமீ (27 மைல்) தொலைவில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (யுஎஸ்ஜிசி) கணித்துள்ளது.

இப்போது உறுதிப்படுத்தப்பட்ட இறப்புகளில் பெரும்பாலானவை கிழக்கு ஆப்கானிஸ்தான் மாகாணமான பக்திகாவில் பதிவாகியுள்ளது. அந்த பகுதியில் மட்டும் மொத்தம் 255 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக உள்துறை அமைச்சக அதிகாரி சலாஹுதீன் அயூபி கூறியுள்ளார்.

casualties,earthquake,pakistan border ,உயிரிழப்பு ,நிலநடுக்கம்  ,பாகிஸ்தான் எல்லை

அதே போல கோஸ்ட் மாகாணத்தில் 25 பேர் பலியானதாகவும், 90 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சமீபத்திய தகவல்கள் கூறுகிறது. இதற்கிடையில் பக்திகா மாகாணத்தில் 90 வீடுகள் இடிந்துவிட்டதாகவும், டஜன் கணக்கான மக்கள் இடிபாடுகளில் சிக்கியிருக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பூகம்பத்தின் அதிர்வுகளை ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் இந்தியா முழுவதும் உள்ள சுமார் 119 மில்லியன் மக்கள் 500 கிலோமீட்டர் (310 மைல்) தொலைவில் உணர்ந்ததாக ஐரோப்பிய நிலநடுக்க ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இப்போது நிலநடுக்கம் குறித்து தலிபான் தலைவர் ஹிபத்துல்லா அகுந்த்சாடா கூறுகையில், இதுவரை நூற்றுக்கணக்கான வீடுகள் இடிந்து விழுந்துள்ள நிலையில் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். அந்த வகையில் கடந்த 2 தசாப்தங்களில் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட மிக மோசமான நிலநடுக்கம் இதுவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags :