Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பப்புவா நியூ கினியா தீவில் இன்று கடுமையான நிலநடுக்கம்

பப்புவா நியூ கினியா தீவில் இன்று கடுமையான நிலநடுக்கம்

By: Karunakaran Fri, 17 July 2020 10:16:31 AM

பப்புவா நியூ கினியா தீவில் இன்று கடுமையான நிலநடுக்கம்

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் பல்வேறு நாடுகள் இயற்கை பேரடர்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

நேற்று இந்தோனேசியா அருகிலுள்ள தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் இன்று இந்தோனேசியா அருகே உள்ள பப்புவா நியூ கினியா தீவில் இன்று காலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.9 அலகாக இந்த நிலநடுக்கம் பதிவானது.

earthquake,papua new guinea,shakes,tsunami ,பூகம்பம், பப்புவா நியூ கினியா, அதிர்வு,சுனாமி

இந்த பயங்கரமான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் சுனாமி காரணமாக, கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் காரணமாக அங்குள்ள கட்டிடங்கள் பயங்கர கடுமையாக குலுங்கின. இதனால் அங்குள்ள மக்கள் அலறியடித்து கொண்டு வீதியில் தஞ்சம் அடைந்தனர். இருப்பினும், இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

Tags :
|