Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஸ்காட்லாந்தில் இருந்து சைக்கிளில் பயணித்து சொந்த ஊர் திரும்பிய கிரீஸ் மாணவர்

ஸ்காட்லாந்தில் இருந்து சைக்கிளில் பயணித்து சொந்த ஊர் திரும்பிய கிரீஸ் மாணவர்

By: Karunakaran Sat, 11 July 2020 8:10:16 PM

ஸ்காட்லாந்தில் இருந்து சைக்கிளில் பயணித்து சொந்த ஊர் திரும்பிய கிரீஸ் மாணவர்

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் காரணமாக தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்டுள்ளன. பல்வேறு நாடுகள் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. இதனால் உலகெங்கும் போக்குவரத்து முடங்கியுள்ளது.

பலரும் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்குச் செல்ல முடியாமலும், சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமலும் தவித்து வருகின்றனர். இந்நிலையில், ஸ்காட்லாந்தின் அபர்தீன் பகுதியில் படித்துவந்த கிளியான் என்ற கல்லூரி மாணவர், கொரோனா காரணமாக சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவித்து வந்தார்.

scotland,greece,bicycle travel,student ,ஸ்காட்லாந்து, கிரீஸ், சைக்கிள் பயணம், மாணவர்

இவரது வீடு, கிரீஸ் தலைநகர் ஏதென்சில் உள்ளது. இந்நிலையில் நாடு கடந்து தனது சொந்த ஊருக்கு சைக்கிளிலேயே செல்ல கிளியான் முடிவெடுத்துள்ளார். இடையே தங்கிக்கொள்ள தற்காலிக கூடாரம், பிரெட் பாக்கெட்டுகள், வெண்ணெய் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு தனது பயணத்தைத் தொடங்கினார்.

சாகசப் பயணங்களில் ஆர்வமுள்ள கிளியான், 7 வார கால பயணத்துக்குப் பிறகு தற்போது தன்னுடைய வீட்டை அடைந்துள்ளார். இதுகுறித்து கிளியான் கூறுகையில், சாலையில் பல இடர்பாடுகள் இருந்ததாகவும், டயர் அடிக்கடி பஞ்சர் ஆனதாகவும், இது ஒரு தனித்துவமான பயணம். சூழ்நிலை சரியான பிறகு மீண்டும் விமானத்தில் பறந்து கல்லூரிக்குத் திரும்பவிருப்பதாக கூறினார்.

Tags :
|