Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • செவ்வாய் கிரகத்தில் உள்ள களிமண் எரிமலைகள் குறித்து ஆய்வு

செவ்வாய் கிரகத்தில் உள்ள களிமண் எரிமலைகள் குறித்து ஆய்வு

By: Nagaraj Tue, 09 June 2020 4:33:36 PM

செவ்வாய் கிரகத்தில் உள்ள களிமண் எரிமலைகள் குறித்து ஆய்வு

செவ்வாய் கிரகத்தின் வடக்குப்பகுதியில் உள்ள களிமண் எரிமலைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

நாசா செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்துக்கு நீண்ட நாட்களாக திட்டமிட்டு வருகிறது. விஞ்ஞானிகள் தற்போது ஓர் புதிய உண்மையை கண்டறிந்துள்ளனர்.

செவ்வாய் கிரகத்தில் உள்ள ஃபயர் பிரீதிங் வேல்கனோஸ் எனப்படும் எரிமலைகள் பற்றி ஆராய்ந்தனர். செவ்வாய் கிரகத்தின் வடக்குப் பகுதியில் மட் வேல்கனோஸ் எனப்படும் களிமண் எரிமலைகளால் பல மலைகள் உருவாகி உள்ளதாகக் கண்டறிந்துள்ளனர்.

mars,scientists,clay volcano,studies,berlin ,செவ்வாய் கிரகம், விஞ்ஞானிகள், களிமண் எரிமலை, ஆய்வுகள், பெர்லின்

இந்த ஆய்வின் முடிவு நேச்சர் ஜியோசயின்ஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. எரிமலை வெடிப்புக்குப் பெயர்போன செவ்வாய் கிரகத்தில் இந்த புதிய கண்டுபிடிப்பு வரவேற்பைப் பெற்றுள்ளது. பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் செவ்வாய் கிரகத்தில் குறுகிய காலகட்டத்தில் அதிக மண் குவிந்தது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து களிமண் எரிமலைகள் குறித்து தொடர்ந்து ஆராயப்படுகிறது என பெர்லின் வானவியல் ஆராய்ச்சி மைய விஞ்ஞானி எர்னஸ்ட் ஹவுபர் தெரிவித்துள்ளார்.

மட் வால்கலிஸம் எனப்படும் இந்த வகை எரிமலை பூமியிலும் உள்ளது. இதில் படியும் களிமண் நாள்பட இளகி மீண்டும் நிலத்தின் அடியில் செல்லும் தன்மை கொண்டது.

Tags :
|