Advertisement

நேபாளத்தில் இன்று திடீரென நிலநடுக்கம்

By: vaithegi Wed, 22 Feb 2023 6:48:07 PM

நேபாளத்தில் இன்று திடீரென நிலநடுக்கம்

நேபாளம் : நேபாளத்தின் பஜூரா மாவட்டத்தில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. மதியம் சுமார் 1.45 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.2 ரிக்டர் என்ற அளவில் பதிவாகியுள்ளது.

நேபாளத்தின் ஜும்லாவிலிருந்து 69 கி.மீ தொலைவில் நிலநடுக்கம் பதிவானதாக நேபாளத்தின் தேசிய நிலநடுக்க கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலநடுக்கத்தால் உயிரிழப்பு எதுவும் ஏற்பட்டதாகத் தகவல் வெளியாகவில்லை.

earthquake,research centre ,நிலநடுக்கம்  ,ஆராய்ச்சி மையம்

அதேபோன்று பொருள் சேதம் பற்றியும் இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை. வட இந்தியாவின் பல பகுதிகளில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

தலைநகரான புதுடெல்லியில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் நகரில் உள்ள கட்டிடங்கள் சிறிது குலுங்கின. முன்னதாக உத்தரகாண்ட் மாநிலத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags :